நெல்லை வருக்கக் கோவை
Jump to navigation
Jump to search
நெல்லை வருக்கக் கோவை [1] என்பது வருக்கக் கோவை நூல்களில் ஒன்று. கோவை என்னும் சிற்றிலக்கியம் அகப்பொருள் நூல். இதன் ஆசிரியர் வீரை அம்பிகாபதி. இவரை இந்த நூலின் இறுதிப் பாடல் 'அம்பிகாபதி வீரையின் வேதியன்' என்று குறிப்பிடுகிறது. [2] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்த நூலில் சிறப்புப் பாயிரம் உட்பட 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் உள்ளன. அ, ஆ, இ, ஈ ... என்று எழுத்து வரிசையில் பாடல்கள் அடுக்கப்பட்டுள்ளன. ஓர் எழுத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்களும் இதில் உள்ளன.
பாடல் - எடுத்துக்காட்டு
பாலனைப் பழித்தல் என்னும் துறையினதாக இந்தப் பாடல் வருகிறது. பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது/
- நூலாம் மருங்கின் உமை பாகர் நெல்லையில் நோற்றுப் பெற்ற
- பாலா, பகலும் வந்தார் இல்லையே, கையில் பற்றிய வேல்
- கோலால் நெடும் புனத்து இட்ட முள் வேலியைக் கோலி மெல்லக்
- காலால் வழி தடவிக் கங்குல்வாய் வரக் கற்றவரே
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 258.
- ↑ இதன் ஆசிரியர் நெல்லைப் பெருமாள் ஐயர் என உ. வே. சாமிநாதையர் குறிப்பிட்டு விரிவாக எழுதியுள்ளார்.