நெடுவெண்ணிலவினார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நெடுவெண்ணிலவினார் சங்ககாலப் புலவர். இவரது இயற்பெயர் தெரியாத நிலையில் எட்டுத்தொகையைத் தொகுத்தவர்கள் இவரது பாடலிலுள்ள 'நெடுவெண்ணிலவு' என்னும் தொடரைக்கொண்டு இவரை 'நெடுவெண்ணிலவினார்' எனப் பெயரிட்டு அழைக்கலாயினர்.

இவர் பாடல் ஒன்றே ஒன்று. அது குறுந்தொகை 47.

பாடல் சொல்லும் செய்தி

தலைவன் இரவில் வரும் வழியின் இன்னலை எண்ணித் தலைவி நிலாவைத் திட்டுகிறாள். நிலாவே! நீ நெடிதாக வளர்ந்துள்ளாய். வெண்மையான ஒளியைத் தருகிறாய்.

வேங்கைப் பூ உதிர்ந்துகிடக்கும் பாறாங்கல், நிலவே! உன் ஒளியில் புலிக்குட்டி போல் தோன்றும். அதனால் நீ நல்லை அல்லை.

"https://tamilar.wiki/index.php?title=நெடுவெண்ணிலவினார்&oldid=12570" இருந்து மீள்விக்கப்பட்டது