நீலாவணன் காவியங்கள் (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நீலாவணன் காவியங்கள்
நூலாசிரியர்நீலாவணன்
உண்மையான தலைப்புநீலாவணன் காவியங்கள் (தமிழ்)
நாடுஇலங்கை
மொழிதமிழ்
வகைPoetry
வெளியீட்டாளர்நன்னூல் வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்
2010
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்112
ISBN978-955-97461-2-6

கவிஞர் நீலாவணனின் மூன்று காவியங்கள் அடங்கிய நூல் நீலாவணன் காவியங்கள் ஆகும். இந்நூல் கொழும்பு நன்னூல் பதிப்பக வெளியீடாக 2010 செப்டெம்பரில் வெளிவந்தது. இதில் பட்டமரம், வடமீன், வேளாண்மை ஆகிய நீலாவணனின் மூன்று காவியங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் வேளண்மை காவியத்தில் குடலை, கதிர் ஆகிய இரு அத்தியாயங்கள் மட்டும் எழுதப்பட்ட நிலையில் நீலாவணன் மரணமடைந்து விட்டார். ஆயினும் அவரின் இலக்கிய நண்பரான வ. அ. இராசரத்தினம் ஒரு முற்றுப்பெற்ற காவியமாகக் கருதி பதிப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.