நீலகண்டா (இயக்குநர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
Neelakanta
Neelakanta in Cinivaram.jpg
Neelakanta in 2018
பிறப்புG. Neelakanta Reddy[1]
கடப்பா, ஆந்திரப் பிரதேசம், India
படித்த கல்வி நிறுவனங்கள்Loyola College, Vijayawada
பணிDirector, Screen Writer

நீலகண்ட ரெட்டி ( NNeelakanta Reddy) ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றுகிறார். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஷோ என்ற திரைப்படத்திற்காக தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.[2] மேலும், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் முதல்முறையாக திரையிடப்பட்டது. நீலகண்டா திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெற்றார். இந்தப் படம் மூன்று நந்தி விருதுகளையும் வென்றது.[3]

இளையராஜா இசையமைப்பில்[4][5] பிரியங்கா என்ற தமிழ்த் திரைப்படத்தை 1994இல் தயாரித்து வெளியிட்டார்.

சொந்த வாழ்க்கை

நீலகண்டா ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவை பூர்வீகமாகக் கொண்டவர்.[1] விசயவாடாவில் உள்ள இலயோலா பொது பள்ளி மற்றும் இலயோலா கல்லூரியில் படித்தார். பள்ளி நாட்களில் இருந்தே நீலகண்டாவுக்கு திரைப்பட இயக்கம் மற்றும் தயாரிப்பு மீது தீவிர ஆர்வம் இருந்தது, பட்டப்படிப்புக்குப் பிறகு சென்னைக்கு வந்தார்.

தொழில் வாழ்க்கை

நீலகண்டா எப்போதும் வழகத்திற்கு மாறான கதாபாத்திரங்களின் உளவியல் ஆய்வை சித்தரிக்கும் படங்களை உருவாக்க விரும்பினார். ஷோ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து மிஸ்ஸம்மா வெளியானது.[6][7]

பின்னர் சிரேயா சரன் மற்றும் வேணு தொட்டம்புடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த சதா மீ செவ்விலோ என்ற திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து நந்தனாவனம் 120கி. மீ என்ற உளவியல் அதிரடிப் படத்தை திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்தும் இருந்தார்.[8] இந்த இரண்டு படங்களும் வணிக ரீதியாக தோல்வியடைந்த போதிலும், நந்தனாவனம் 120கி. மீ இவருக்கு விமர்சனப் பாராட்டைப் பெற்றுத் தந்தது.[9] இவற்றைத் தொடர்ந்து ஜெனிலியா மற்றும் ராஜா அபே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த மிஸ்டர் மேதாவி படத்தை வெளியிட்டார். ராமராவ் போடுலூரி தயாரித்த இந்தப் படம் சராசரியை விட அதிகமாக வசூலித்தது. இந்தியில் வெற்றி பெற்ற 'ஏ வெட்னஸ் டே! "திரைப்படத்தின் தெலுங்கு மறு ஆக்கமான ஈநாடு என்ற ஒன்றிற்கும் இவர் உரையாடல்களை எழுதினார். இது பின்னர் சக்ரி டொலெட்டி இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் 2009 இல் உன்னைப்போல் ஒருவன் என்ற பெயரில் வெளியானது.[10] 2011 ஆம் ஆண்டில், சிறீகாந்த் மற்றும் கமலினி முகர்ஜி நடித்த விரோதி படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்காக நீலகண்டா 2011 ஆம் ஆண்டில் சிறந்த உரையாடல் எழுத்தாளருக்கான விருதைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் இவர் சம்மக் சலோ படத்தை இயக்கினார். இது மோசமான விமர்சனங்களைப் பெற்றது.[11][12]

2018 ஆம் ஆண்டில், மஞ்சிமா மோகன் நடித்த ஜாம் ஜாம் என்ற மலையாள திரைப்படத்தை இயக்கினார். இது குயின் என்ற இந்திப் படத்தின் அதிகாரப்பூர்வ மறு ஆக்கம் ஆகும்.[13][14]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Interview with Neelakanta". Idle Brain. http://www.idlebrain.com/celeb/interview/neelakanta.html. 
  2. "Awards of Neelakanta". Cine Radham இம் மூலத்தில் இருந்து 2 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140302032946/http://www.cineradham.com/biographies/directors/neelakanta/awards.html. 
  3. "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" (in Telugu). Information & Public Relations of Andhra Pradesh. http://ipr.ap.nic.in/New_Links/Film.pdf. 
  4. "Priyanka (1994)" இம் மூலத்தில் இருந்து 30 சூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130630044759/http://www.raaga.com/channels/tamil/album/T0002889.html. 
  5. "Watchman Vadivelu / Priyanka" இம் மூலத்தில் இருந்து 31 மே 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230531132944/https://avdigital.in/collections/ilaiyaraaja-audio-cd/products/watchman-vadivelu-priyanka. 
  6. "Directors show all the way". Idle brain. http://www.idlebrain.com/movie/archive/mr-missamma.html. 
  7. "Review". Fully hyderabad. http://movies.fullhyderabad.com/show/telugu/show-movie-reviews-926-2.html. 
  8. "Sada mee sevalo is a dud". Rediff. http://www.rediff.com/movies/review/sada/20050328.htm. 
  9. "120 km away from routine flicks". cinegoer. http://www.cinegoer.net/reviews/nandanavanam.htm. 
  10. https://cinema.vikatan.com/tamil-cinema/a-tribute-to-unnaipol-oruvan-on-its-10th-year-anniversary
  11. "writer sleeping under tree". tupaki. http://english.tupaki.com/enews/view/Neelakantas-Writer-Sleeping-Under-Tree--/18443. 
  12. "Nothing flashy about this". 123 telugu. 15 February 2013. http://www.123telugu.com/reviews/review-chammak-challo-nothing-flashy-about-this.html. 
  13. "தெலுங்கில் குவீன் - டைம்ஸ் ஆப் இந்தியா". https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/telugu-remake-of-queen-gets-a-title/articleshow/64414302.cms. 
  14. "நான்கு குவீன்கள் - டெக்கான் கிரானிக்கல்". http://www.deccanchronicle.com/entertainment/tollywood/011117/four-queens-to-bond-in-france.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நீலகண்டா_(இயக்குநர்)&oldid=21085" இருந்து மீள்விக்கப்பட்டது