நிலாரசிகன்
Jump to navigation
Jump to search
நிலாரசிகன்(ராஜேஷ் வைரபாண்டியன்) , புகைப்படத்திற்கு நன்றி, sirukathaigal.com இவர் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற இதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன. 2011க்கான "சுஜாதா சிறந்த சிற்றிதழ் விருது" பெற்றிருக்கும் 361 என்னும் தீவிர நவீன இலக்கிய சிற்றிதழின் ஆசிரியர்.[மேற்கோள் தேவை]
கவிதை நூல்கள்
- வெயில் தின்ற மழை(2010)
- மீன்கள் துள்ளும் நிசி (2012) - சிறந்த கவிதைநூலுக்கான புன்னகை விருது பெற்றது
- கடலில் வசிக்கும் பறவை (2013)
- வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி(2018) - சிறந்த கவிதை நூலுக்கான சுஜாதா விருது பெற்றது
சிறுகதை நூல்
- யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்(2009)
- ஜூலி யட்சி(2015)
சிறுவர் நாவல்
- குகைதேசக் குள்ளர்கள்(2020)
வெளியிணைப்புகள்
- நிலாரசிகன் இணையதளம் பரணிடப்பட்டது 2020-02-04 at the வந்தவழி இயந்திரம்
- நிலாரசிகன் சிறுகதைகள்
- மாற்று இணையத்தில் நிலாரசிகன் எழுதிய தமிழ் வலைப்பதிவுகளின் தொகுப்பு பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்