நிர்மலா ராகவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நிர்மலா ராகவன்
நிர்மலா ராகவன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
நிர்மலா ராகவன்
பிறந்ததிகதி அக்டோபர் 17 1942
அறியப்படுவது எழுத்தாளர்

நிர்மலா ராகவன் (பிறப்பு: அக்டோபர் 17 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவின் பிரபல ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. பல மேடைகளிலும் கருத்தரங்கங்களிலும் பேசியுள்ளார். இந்தியர்களிடையே காணும் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து தீவிரமாக சிந்திக்கும் இவர் தமது எழுத்துக்களில் அவற்றின் தீர்வுக்கான ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இளைஞர் மனோநிலைகள் பற்றியும் அதிகம் எழுதியுள்ளார். நேரடிச் சமூகச் சேவையிலும் ஈடுபட்டு வருகின்றார்.

பரிசில்களும், விருதுகளும்

  • "சிறுகதைச் செம்மல்"விருது (1991)
  • "சிறந்த பெண் எழுத்தாளர்"விருது (1993)
  • தங்கப் பதக்கம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (2006)
  • சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருது (தங்கப் பதக்கம், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2006)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=நிர்மலா_ராகவன்&oldid=6309" இருந்து மீள்விக்கப்பட்டது