நியதிப் பயன்
நியதிப் பயன் [1] என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணுடைய வள்ளல் இயற்றிய நூல்களில் ஒன்று. கண்ணுடைய வள்ளல் சம்பந்தர் பரம்பரையில் வந்தவர். திருஞான சம்பந்தரை ஆசிரியராக எண்ணி வழிபட்டவர். இவர் இயற்றிய நியதிப் பயன் நூலில் 103 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் உள்ளன. அவற்றில் முதல் 23 பாடல்கள் ஆசிரியரிடம் ஐயம் கேட்பது போல அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் "காழிக் கண்ணுடைச் சம்பந்தனே" என்னும் தொடர் கொண்டு முடிகின்றன. எஞ்சிய பாடல்கள் ஆசிரியர் விடை கூறுவது போல உள்ளன.
அன்றாடம் செய்யவேண்டிய நியதிகளுக்கு [2] விளக்கங்கள் கேட்கப்படுகின்றன. பான்னர் விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.
நியதிகளுக்கு விளக்கம் கூறும் வேறி இரண்டு நூல்களும் உள்ளன. ஒன்று சதமணிக் கோவை. இது 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். மற்றொன்று குருமொழி வினாவிடை இது நியதிப் பயன் நூலுக்குக் காலத்தால் பிந்தியது. பூசை, கிரியை போன்றவற்றிற்கு அமைந்த வினா-விடை.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 165.
- ↑ நித்திய கடன்களுக்கு