நிகார் சாஜி
நிகார் சாஜி Nigar Shaji | |
---|---|
பிறப்பு | செங்கோட்டை, தென்காசி, தமிழ் நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | மின்னனியலில் முதுதொழிநுட்பம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், மெசுரா |
பணி | திட்ட இயக்குநர், ஆதித்தியா எல் 1 |
அமைப்பு(கள்) | சத்தீசு தவான் விண்வெளி ஆய்வு மையம்
யூ. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம் இசுரோ |
அறியப்படுவது | திட்ட இயக்குநர், ஆதித்தியா எல் 1 |
பெற்றோர் | சேக் மீரான் (தந்தையார்), சித்தூன் பீவி (தாயார்) |
நிகார் சாஜி (Nigar Shaji) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய விண்வெளி அறிவியலாளர் ஆவார். இவர் ஆதித்யா - எல் 1 இன் திட்ட இயக்குநராக உள்ளார். இந்தியாவின் முதல் சூரிய திட்டமான இது 2023, செப்டம்பர் 2 அன்று காலை 11:50 மணிக்கு வெற்றிகரமாக தொடங்கப்பட்டது.[1][2][3][4][5]
நிகர் சுல்தானா என்ற பெயரில் ஒரு முசுலீம் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை சேக் மீரான் ஓர் உழவராவார். தாய் சித்தூன் பீவி ஒரு இல்லத்தரசி ஆவார்.[2] எஸ். ஆர். எம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலத்தில் அடிப்படைக் கல்வியைப் பெற்றார்.[3] திருநெல்வேலி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரியில் பயின்று, அங்கு மின்னணுவியல், தகவல்தொடர்பியலில் பொறியியல் பட்டம் பெற்றார்.[2]
1987 ஆம் ஆண்டில் யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இசுரோ) சாஜி சேர்ந்தார்.[2] இவர் பல செயற்கைக்கோள் திட்டங்களில் பணியாற்றியுள்ளார் மற்றும் வளக்கோள் - 2ஏ இன் இணை திட்ட இயக்குநராக இருந்தார்.[2][6]
நிகர் சாஜி தனது தாய், மகளுடன் பெங்களூரில் வசிக்கிறார்.[2][7][8] இவரது கணவர் துபாயில் பணிபுரிகிறார். அவரது மகன் நெதர்லாந்தில் ஓர் அறிவியலாளர் ஆவார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Meet Nigar Shaji, a woman ISRO scientist who helmed Aditya-L1 mission". https://m.economictimes.com/news/science/adityas-tenkasi-connection-in-indias-maiden-solar-mission/amp_articleshow/103308500.cms?amp_gsa=1&_js_v=a9&usqp=mq331AQIUAKwASCAAgM=#amp_tf=From%20%251$s&aoh=16936684620776&referrer=https://www.google.com&share=https://m.economictimes.com/news/science/adityas-tenkasi-connection-in-indias-maiden-solar-mission/articleshow/103308500.cms.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Meet Nigar Shaji, The Project Director Of India's First Sun Mission: 5 Points". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-02."Meet Nigar Shaji, The Project Director Of India's First Sun Mission: 5 Points". NDTV.com. Retrieved 2023-09-02.
- ↑ 3.0 3.1 "Meet Nigar Shaji from TN's Tenkasi, Aditya-L1 mission project director". https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/sep/02/meet-nigar-shaji-from-tns-tenkasi-aditya-l1-mission-project-director-2610872.amp?amp_gsa=1&_js_v=a9&usqp=mq331AQIUAKwASCAAgM=#amp_tf=From%20%251$s&aoh=16936684620776&referrer=https://www.google.com&share=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/sep/02/meet-nigar-shaji-from-tns-tenkasi-aditya-l1-mission-project-director-2610872.html.
- ↑ "ISROs Aditya-L1 Solar Mission: Nigar Shaji Addresses After Successful Launch Of First Sun Mission". Zee News (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-09-02.
- ↑ "Meet The Project Director Of Ambitious Mission Aditya-L1| Nigar Shaji from Tamil Nadu". TimesNow (in English). 2023-09-02. பார்க்கப்பட்ட நாள் 2023-09-02.
- ↑ lallanpost (2023-09-02). "इसरो की एक महिला वैज्ञानिक निगार शाजी ने आदित्य-एल1 मिशन का नेतृत्व किया है". Lallanpost (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-09-03.
- ↑ Desk, INVC (2023-09-04). "Diversity Shines: Muslim Scientists Nigar Shaji Heads ISRO's Sun Mission". INVC (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.
- ↑ Desk, INVC (2023-09-04). "Diversity Shines: Muslim Scientists Nigar Shaji Heads ISRO's Sun Mission". INVC (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.