நா. சோமகாந்தன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நா. சோமகாந்தன்
NSomakanthan.jpg
முழுப்பெயர் நாகேந்திர ஐயர்
சோமகாந்தன்
பிறப்பு 14-01-1934
கரணவாய் தெற்கு,
யாழ்ப்பாண மாவட்டம்,
இலங்கை
மறைவு 28-04-2006
(அகவை 72)
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
பெற்றோர் நாகேந்திர ஐயர்,
செல்லம்மாள்
வாழ்க்கைத்
துணை
பத்மா
சோமகாந்தன்


நா. சோமகாந்தன் (ஈழத்துச் சோமு, 14 சனவரி 1934 - 28 ஏப்ரல் 2006) ஈழத்து எழுத்தாளர். நாவல், சிறுகதை, பத்திரிகைளுக்கான இலக்கியத்திறனாய்வு (பத்தி எழுத்துக்கள்) என எழுதி வந்தவர்.

பிறப்பு

யாழ்ப்பாண மாவட்டம், கரணவாய் தெற்கில் கலட்டி என்ற சிற்றூரில் சாதாரண ஒரு அந்தணர் குடும்பத்தில் நாகேந்திர ஐயர், செல்லம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர் சோமகாந்தன். தனது ஆரம்பப் படிப்பினை கரணவாய் குருக்கள் பாடசாலையில் ஆரம்பித்தார். அவருக்கு சைவக்குருக்களாகவிருந்து எழுத்தறிவித்தவர்கள் திரு. வைத்தியநாதக் குருக்கள், செவ்வந்திநாதக்குருக்கள் ஆகியோர். தனது இடைநிலைக் கல்வியை கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியிலும் பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார்.[1] விக்னேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்கும் காலமே இவரின் எழுத்துப்பணிக்கு வித்திட்ட களமாக அமைந்தது. அங்கு ஆசிரியத் தம்பதிகளாகக் கடமையாற்றிய ஐ.சிற்றம்பலம் ஆசிரியர் (ஐ.சி. மாஸ்ரர்) அவர்களின் ஊக்குவிப்பில் இலக்கியத்தில் நாட்டமும், எழுதுவதற்கான ஆக்கத்திறனையும் பெற்றுக்கொண்டார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் அரச ஊழியராகப் பணியாற்றி, பின்னர் இந்து, கலாசார அமைச்சில் நிருவாக அதிகாரியாகப் பணியாற்றினார்.[1]

இலக்கியப் பணி

1962இல் சென்னையில் இடம்பெற்ற அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். 1964இல் அ. ந. கந்தசாமி அவர்களின் ஆய்வின் முயற்சியினால் மகாகவி பாரதியார் யாழ்ப்பாணத்துச் சாமி எனக்குறிப்பிட்டுத் தனது ஞானகுருவாகக் கொண்டிருந்த மோனம் அருளம்பலம் அவர்கள் பிறந்து வாழ்ந்த வியாபாரிமூலையில் விழா எடுத்து நினைவுச் சின்னமும் நிறுவ அரும்பாடுபட்டார். தமிழில் முதலாவது கைநூலை வரதரோடு இணைந்து 1970ல் வெளியிட்டார். ஆறுமுக நாவலர் நூற்றாண்டு மலர் வெளியீட்டுக் குழுவில் செயலாளராக பணியாற்றி அந்த நூல் சிறப்பாக வெளிவரக் காரணமாகச் செயற்பட்டார். 1980இல் நீதியரசர் தம்பையா அவர்களின் தலைமையில் பாரதி நூற்றாண்டு விழாக்குழுவின் தேசிய செயலாளராகப் பணியாற்றினார்.

பேராசிரியர் க. கைலாசபதி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு நாவலர் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய பாரிய நூலை வெளியீடு செய்தார்.

எழுத்தாளர் சோமகாந்தன் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் எழுதினார். இவருடைய மனைவி திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் பெண்ணிய வாதியாக பெண்கள் விடுதலைக்காகப் போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1954ம் ஆண்டு தொடக்கம் அவர் எழுத்துலகில் பிரவேசித்து சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.

பட்டங்கள்

  • 1991 இல் இவரது இலக்கியப் பணியைக் கெளரவித்து திருகோணமலை இலக்கிய நண்பர்களினால் ;இலக்கியக் குரிசில்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
  • 1994ல் இலங்கை கலாச்சார அமைச்சு தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அவர் வழங்கிய சேவையைப் பாராட்டி 'தமிழ் ஒளி' என்னும் பட்டத்தினை வழங்கிக் கெளரவித்தது.

வெளிவந்த நூல்கள்

[நூலகம் ]

  • நிலவோ நெருப்போ (சிறுகதைத் தொகுதி)
  • விடிவெள்ளி பூத்தது (நாவல், வரதர் வெளியீடு)
  • ஈழத்து இலக்கிய வரலாறு - பல்துறை நோக்கு (ஆய்வு)
  • பொய்கை மலர் (நாவல்)
  • நிகழ்வுகளும் நினைவுகளும் - காந்தன் கண்ணோட்டம்
  • தத்துவச் சித்திரங்கள் (வானொலி உரைகள்)
  • ஆகுதி (சிறுகதைத் தொகுதி)
  • ஈழத்தமிழருக்கு ஏன் இந்த வேட்கை?
  • Lanka and Ramayanam
  • Ancient Temples of Shiva in Sri Lanka

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=நா._சோமகாந்தன்&oldid=2736" இருந்து மீள்விக்கப்பட்டது