நான்மணிக்கடிகை பழைய உரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]

நான்மணிக்கடிகை நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு.[2] இது சொல் விடாமல் எழுதப்பட்டுள்ள பொழிப்புரையாகத் தெளிவாகவும், சுருக்கமாகவும் அமைந்துள்ளது.
இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

உரை விளக்கத்தில் புதுமை
  • 7 இடங்களில் பாடலின் மூலத்துக்கு வேறு பாடம் காட்டுகிறது.
  • மனைக்கு விளக்கம் மடவாள் என்பதனை இவர் புறநானூற்று நிகழ்வோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார்.[3]
  • தீதில் ஒழுக்கம் – தான் பிறந்த குலத்துக்குத் தீது வராமல் ஒழுகும் ஒழுக்கம் [4]
  • ஏலாதான் பாருப்பான் – ஒருவரோடு என்றும் மாறுபடாமவன் பார்ப்பான் ஆவான் [5]
  • தன்னின் இடும்பை – தற்பெருமையால் வரும் இடும்பை [6]
  • நல்லாள் இல்லாத குடி – தாங்கவல்ல நல்ல ஆண்மகன் இல்லாத குடி (ஆள் – ஆண்மகன்) [7]

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
    • பழைய உரை, பதிப்பு, 1903
    • செந்தமிழ், ரா. ராகவையங்கார் பதிப்பு, 1924
    • வையாபுரிப்பிள்ளை பதிப்பு 1944
  2. பாடல் 103
  3. பாடல் 8
  4. பாடல் 54
  5. பாடல் 94
  6. பாடல் 43
"https://tamilar.wiki/index.php?title=நான்மணிக்கடிகை_பழைய_உரை&oldid=15711" இருந்து மீள்விக்கப்பட்டது