நாகம்மாவா? (நூல்)
Jump to navigation
Jump to search
நாகம்மாவா? | |
---|---|
நூல் பெயர்: | நாகம்மாவா? |
ஆசிரியர்(கள்): | நீல. பத்மநாபன் |
வகை: | இலக்கியம் |
துறை: | கதைகள் |
இடம்: | மதுரை |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | vi +124 |
பதிப்பகர்: | முத்துப் பதிப்பகம் மாதவி ஆழ்வார் நகர் மதுரை 625 019 |
பதிப்பு: | முதற் பதிப்பு: நவம்பர் 1978 இரண்டாம் பதிப்பு: நவம்பர் 1980 |
ஆக்க அனுமதி: | நீல. பத்மநாபன் |
நாகம்மாவா? என்னும் நூல் நீல. பத்மநாபன் 1974ஆம் ஆண்டிற்கும் 1976ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதிய 15 சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். இவற்றுள் 10 கதைகளை செய்தித் தொகுப்பு நடப்பியல் முறையில் எழுதப்பட்டவை என்றும் 5 கதைகளை விமரிசன நடப்பியல் முறையில் எழுதப்பட்டவை என்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சி. கனகசபாபதி பகுக்கிறார். [1]
பொருளடக்கம்
இந்நூலில் உள்ள கவிதைகளும் அவை வெளிவந்த இதழ்களும் வருமாறு:
வ.எண் | கதைத் தலைப்பு | எழுதப்பட்ட நாள் | வெளிவந்த இதழ் | வெளிவந்த நாள் | பேசு பொருள் |
01 | குழந்தையும் தெய்வமும் | சதங்கை தீபாவளி மலர் | 1974 | உடன்பிறந்தானின் மனைவியுடன் உறவுகொள்ளும் சமுதாய வழக்கம். | |
02 | சமூக ஜீவி | சதங்கை | ஏப்ரல் 1975 | சமுதாய உயிராக வாழாமல் ஏமாற்றும் போலியாக வாழும் மனித நிலைமை. | |
03 | அபஸ்வரங்கள் | சுதேசமித்திரன் | 8-8- 1974 | மூளைக்கோளாறு கொண்ட கணவன், மனைவியைத் துன்புறுத்துதல். | |
04 | மாத்திரை | 17-2-1975 | குமுதம் | 20-3-1975 | மருந்துக் கடையில் மாத்திரையை மாற்றிக் கொடுப்பதால் – டாக்டரின் புரியாத கையெழுத்தால் – நோயாளியின் உயிருக்குத் தீங்கு நேர்கிறது. |
05 | இல் அறம் | 3-3-1975 | ஏடு | ஏப்ரல் 1975 | பணம் சேர்க்கும் பேராசையால் இல்லறம் அறமில்லாமல் போகிறது. |
06 | பதர் | 26-3-1975 | சதங்கை | திசம்பர் 1975 | நெல்லில் பதர் இருப்பதுபோல் மனிதர்களில் தாயை மதிக்காத பதரும் இருக்கிறான். |
07 | வீடு திரும்புதல் | 9-4-1975 | குமுதம் | 3-7-1975 | திருமண வயது மிகுதியும் கடந்துவிட்டதால் வரும் மனப்பாதிப்பு. |
08 | மோகபங்கம் | 6-7-1975 | வஞ்சி நாடு | ஆகத்து 1975 | மணமுறிவும் பாலியல் தடுமாற்றமும் கொண்ட இளைஞனின் நிலையும் தந்தையின் மனப்பாதிப்பும். |
09 | காவல் | 6-7-1975 | வஞ்சி நாடு | ஆகத்து 1975 | நாயைக் கண்டால் பயம். |
10 | விருந்து | 23-8-1975 | தீபம் | நவம்பர் 1975 | பணக்கார வீட்டுப் பெண்ணை மணந்துகொண்ட நடுத்தர வர்க்க மனிதன் குறைத்து மதிக்கப்படுதல். |
11 | தூண்டுதல்கள் | 6-10-1975 | குமுதம் | 30-10-1975 | பாலியல் தூண்டுதல்களின் மிகுதியால் முளைக்கோளாறு உண்டாதல். |
12 | அந்நியன் | 13-10-1975 | பம்பாய்த் தமிழ்ச் சங்க நாடக விழாமலர் | 1975 | நண்பனாகப் பழகிய வீட்டில் அந்நியனாக விரட்டப்படுதல். |
13 | போதை | 13-11-1975 | கணையாழி | சூலை 1979 | குடிபோதையின் விளைவுகள். |
14 | தேடுகிறவர்கள் | 29-3-1976 | தீபம் | ஏப்ரல் 1976 | கூட்டமும் ஆரவாரமும் நிறைந்த இடத்திலும் தாம் ஏதோ ஒன்றைச் சிந்தனையோடு தேடல். |
15 | நாகம்மாவா? | 23-5-1976 | குமுதம் | 12-8-1976 | நாகம் நினைத்தால் பழிவாங்கிவிடும் என்ற நம்பிக்கை. |
மேற்கோள்கள்
- ↑ கனகசபாபதி சி, ஆய்ந்துரை, நாகம்மாவா?, முத்துப் பதிப்பகம், மதுரை, 1980