நவநீதம் பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நவநீதம் பிள்ளை
நவநீதம் பிள்ளை
இயற்பெயர்/
அறியும் பெயர்
நவநீதம் பிள்ளை
பிறந்ததிகதி 23 செப்டெம்பர் 1941
டர்பன்
கல்வி முனைவர் பட்டம்
பணியகம் ஐக்கிய நாடுகள் அவை
கல்வி நிலையம் நதால் பல்கலைக்கழகம்
நவநீதம் பிள்ளை

நவநீதம் பிள்ளை (Navanethem Pillay, பிறப்பு: செப்டம்பர் 23, 1941) தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி ஆவார். இவர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் 2003 ம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் செப்டம்பர் 1, 2008 முதல் நான்கு ஆண்டு காலத்துக்கு இப்பதவியில் பணியாற்றுவார்.

வாழ்க்கைக் குறிப்பு

1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் டர்பன் நகரில் பிறந்த ஒரு இந்திய குடிவழித் தமிழரான நவநீதம் பிள்ளையின் தந்தை ஒரு பேருந்து ஓட்டுநர்.[1] ஜனவரி 1965 இல் இவர் காபி பிள்ளை என்னும் வழக்கறிஞரை மணந்தார்[2]1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.

1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். அவர், தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்கும், அவரது கணவர் உட்பட்ட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர்.

புவியிடம் அடிப்பிடையிலும் பால், அனுபவ நோக்கிலும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1973 இல் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார்[3].

1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் ”சமத்துவம் இப்போது” (Equality Now) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1995 இல் தென்னாபிரிக்காவின் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய குடிவழித் தமிழ்ப் பெண்மணி இவரே[4].

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்

ஜூலை 24, 2008 இல், ஐநா பொதுச் செயலர் பான் கி மூனால் நவநீதம் பிள்ளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பதவியில் இருந்து விலகும் லூயிஸ் ஆர்பர் இற்குப் பதிலாகப் பரிந்துரைக்கப்பட்டார்[4][5]. ஜூலை 28, 2008 இல் இடம்பெற்ற ஐநா பொது அவையின் சிறப்பு அமர்வில் இவரது நியமனம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. செப்டம்பர் 1, 2008 இலிருந்து நான்கு ஆண்டு காலத்துக்கு இப்பதவியில் இருப்பார்[6].

விருதுகள்

2003 இல் இவருக்கு பெண்கள் உரிமைக்கான முதலாவது குரூபர் பரிசு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. The bus driver's daughter (alumni profile), Harvard Law Bulletin, Spring 2006
  2. Interview with Vino Reddy (ஆகஸ்டு 11 2002). Voices of Resistance. Retrieved on சூலை 30 2008.
  3. "Citation for honorary doctorate, Rhodes University, April 2005". Archived from the original on 2006-09-26. பார்க்கப்பட்ட நாள் 2008-07-25.
  4. 4.0 4.1 தமிழ்நெட்:Navanethem Pillay tipped to become U.N. Human Rights Chief
  5. John Heilprin (சூலை 24 2008). "South Africa lawyer nominated as UN rights chief[தொடர்பிழந்த இணைப்பு]". The அசோசியேட்டட் பிரெசு. Retrieved on சூலை 30 2008.
  6. FACTBOX-South Africa's Pillay is new human rights chief

வெளி இணைப்புகள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/index.php?title=நவநீதம்_பிள்ளை&oldid=24006" இருந்து மீள்விக்கப்பட்டது