நவகமுவ பத்தினிக் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நவகமுவ பத்தினிக் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இலங்கை, நவகமுவ
புவியியல் ஆள்கூறுகள்06°55′26.93″N 80°1′4.9″E / 6.9241472°N 80.018028°E / 6.9241472; 80.018028
சமயம்பௌத்தம்
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு

நவகமுவ பத்தினிக் கோயில் என்பது இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் நவகமுவாவில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயில் ஆகும். இக்கோயிலின் வரலாறு, கட்டடக்கலை, மானுடவியல் அம்சங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தொல்பொருள் துறை இக்கோயிலை நாட்டின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளது. [1][2]

நவகமுவா பகுதியில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் படி கி.மு. காலத்திற்கு முந்தைய தொல்லியல் சிறப்பு முக்கியத்துவம் பெற்ற இடமாக கண்டறியப்பட்டது. [3] அதிசயங்களுக்காகவும், பத்தினி தெய்வத்தின் அருளைப் பெறுவதற்காகவும் இந்தக் கோயில் மக்களிடையே பிரபலமாக உள்ளது. [1]

தொன்மவியல்

இதன் தொன்மக்கதையின் படி, முதலாம் கஜபாகு (114−136) நாவலந்தீவிலிருந்து (இந்தியா) வெற்றிகரமாக 12,000 ஆண் கைதிகளுடன் திரும்பியபோது, அவருடன் பத்தினியின் சிலம்பைக் கொண்டு வந்தார். [3] அனுராதாபுவராவுக்குத் திரும்பிவருகையில் அவர் ஓய்வெடுக்க தங்கிய ஒரு இடத்தில் பத்தினி சிலம்பு பொறிக்கப்பட்ட கோயிலை கட்டினார். [3][4]தொன்மத்தின் வேறுபட்ட விளக்கமானது, பத்தினி தேவி நாவலந்தீவிலிருந்து 12,000 பக்தர்களுடன் 16 சாதிகளை உருவாக்கி இந்த பகுதியில் குடியேறினார் என்று கூறுகிறது. [4]

வரலாறு

கோட்டை இரச்சிய காலத்தில் இருந்து கோயிலைப் பற்றிய வரலாற்று சான்றுகள் கிடைக்கின்றன. [5][3][4] இராசாவலிய நூலின்படி, இப்பகுதி அப்போது ஹெவாகம் கோரலே என்று அழைக்கப்பட்டது. அவ்வப்போது தேவலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்ததப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கட்டுமானப் பொருட்கள், கிணறுகள், டச்சு நாணயங்கள், இடைக்காலத்தின் இரும்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1554–1765 இலங்கையில் டச்சு காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் பழைய இறங்கும் இடம் என்று அறியப்பட்ட பழைய தேவலாயாவின் வடக்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோட்டை இராச்சிய காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இங்கு நடந்தன

விழாக்கள்

நவகமுவ பத்தினிக் கோயிலின் முக்கிய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து மாதத்தில் நடைபெறும் 'கோன்பிதா பெரஹேரா' ஆகும். இந்த பாரம்பரிய விழா கடந்த 1500 ஆண்டுகளாக பத்தினி தேவியின் நினைவாக கிராமத்தில் தேவியின் அருளைப் பெற நடத்தப்பட்டது. வருடாந்திர பெரஹேரா விழாவில் கலந்துகொள்ள கிராமங்களில் வெள்ளை காளைகளை பிரத்தியேகமாக வளர்க்கப்படுகின்றன. [6]

மறுசீரமைப்புகள்

நவகமுவ கோயில் வளாகத்தில் கோட்டை இராச்சியக் காலம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டு காலகட்டம் ஆகிய இரண்டு காலங்களைச் சேர்ந்த கட்டிடங்கள் இருப்பதாக தொல்பொருள் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் கோயில் வளாகத்தில் மறுசீரமைப்பு பணிகள், சில கட்டுமானங்கள் போன்றவை 1813-1928 காலகட்டத்தில் கோயிலின் தலைமை பூசாரியான கட்டுவாலா ஸ்ரீ சுமனதிஸ்ஸா தேரோவால் செய்யப்பட்டன. [3]

1813-1928 காலகட்டத்தில் கோயில் மறுசீரமைக்கப்பட்ட பின்னர், 3-ஆம் ஆயிரமாண்டு வரை கோயிலில் எந்த மறுசீரமைப்பு பணியும் செய்யப்படவில்லை. [7] 2016 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு, தொல்பொருள் துறையின் வழிகாட்டுதலின் கீழ், கோயிலானது முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. மறுசீரமைப்பில், கூரையில் செப்புத் தகட்டு பதித்தல், தரையில் கருங்கல் பலகை பாவுதல், பலா மரங்களைக் கொண்டு மர வேலைகள் போன்றவை செய்யப்பட்டன. மறுசீரமைப்பு முடிக்க 30 மில்லியன் ரூபாய் செலவானது. இந்த திட்டத்திற்கு நந்தனா லோகுவிதானா அறக்கட்டளை நிதியளித்தது. [8] இந்த புதிய சீரமைப்புப் பணியின் ஒரு பகுதியாக, பத்தினி தேவியின் முழு உருவ பளிங்குச் சிலை இந்தியாவில் இருந்து நவகமுவாவுக்கு கொண்டு வரப்பட்டது. இது 2016 ஆகத்து 19 அன்று பொதுமக்களின் பாரவைக்கு திறக்கப்பட்டது. [7]

பாதுகாப்பு

இக்கோயிலின் எட்டுப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமான திணைக்களம் அறிவித்துள்ளது [3][4]

  1. கருவறை (பிலிமேஜ்)
  2. துறவிகளின் தங்குமிடம் (சங்கவாசய)
  3. கல் தூண் (கல்கனு) தேவலயா
  4. மகா பத்தினி தேவாலயம்
  5. விஷ்ணு தேவலயம்
  6. கட்டரகம தேவலயம்
  7. டெடிமுண்டா தேவலயம்
  8. பண்டைய நா மரத் தோப்பு (இது 100 ஆண்டுகளுக்கும் முந்தையது).

குறிப்புகள்

 

  1. 1.0 1.1 "Rituals and Beliefs of the Nawagamuwa Paththini Dewalaya". International Association for Asian Heritage. 2013. https://www.archaeology.lk/wp-content/uploads/2013/09/intenational_conference_on_asian_art_culture_and_heritage_colombo_sri_lanka_2013_august_final.pdf. 
  2. Gazette 1264 22 February 2002.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Nawagamuwa". Angelfire. http://www.angelfire.com/planet/heritagesl2/nawagamuwa/nawagamuwa.htm. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Archived copy" இம் மூலத்தில் இருந்து 2013-06-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130611120413/http://www.sundayobserver.lk/2011/04/17/fea28.asp. 
  5. "Nawagamuwa Pattini Devalaya". Lanka Pradeepa. 13 January 2020. https://www.lankapradeepa.com/2020/01/nawagamuwa-pattini-devalaya-viharaya.html. 
  6. "Annual 'Gonpita Perahera' of the Nawagamuwa Sath Pattini Devale". Sunday Times. 11 September 2016. http://www.sundaytimes.lk/160911/funday-times/annual-gonpita-perahera-of-the-nawagamuwa-sath-pattini-devale-207967.html. 
  7. 7.0 7.1 "President unveils statue of Goddess Paththini at Nawagamuwa Devalaya". The Government official news portal. 20 August 2020. http://www.news.lk/news/politics/item/14215-president-unveils-statue-of-goddess-paththini-at-nawagamuwa-devalaya. 
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170629231428/http://srinews.lk/sinhala_news_page.php?id=63&type=Art. 
"https://tamilar.wiki/index.php?title=நவகமுவ_பத்தினிக்_கோயில்&oldid=18514" இருந்து மீள்விக்கப்பட்டது