இராசாவலிய
Jump to navigation
Jump to search
இராசாவலிய (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) என்பது ஒரு பண்டைய இலங்கை வரலாற்று நூல் ஆகும்.[1] விஜயன் எனும் இலங்கை மன்னனின் வரலாற்றில் இருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் எனும் கண்டி மன்னனின் வரலாறு வரை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பற்றி தொடர்ச்சியாக எழுதப்பட்ட இலக்கிய மூலாதாரமான இது சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது.[2] இராஜாவலிய அரசியல் செய்திகளுக்கே முதலிடம் கொடுத்துள்ளது. சமயச் செய்திகளை விளக்கவில்லை. இலக்கிய நடையைத் தவிர்த்து பொதுமக்களைக் கவரும் வண்ணம் எளிய நடையில் இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக கி.பி. 1359 - ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்தைப் பற்றி அறிய இந்நூல் பெரிதும் பயன்படுகிறது. இது பலரால் எழுதப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "The rajavaliya : or, A historical narrative of Sinhalese kings from Vijaya to Vimala Dharma Surya II, to which are added a glossary and a list of sovereigns / ed. by B. Gunasekara". Archived from the original on 2018-04-20. பார்க்கப்பட்ட நாள் 2016-08-27.
- ↑ "Rajavaliya | historical Ceylonese chronicle". Archived from the original on 2020-11-13. பார்க்கப்பட்ட நாள் 2016-08-27.
வெளி இணைப்புகள்
- Rajavaliya. 1976. பார்க்கப்பட்ட நாள் 2016-09-27.
- Gunasekara, B. (1900). Rajavaliya, Or, a Historical Narrative of Sinhalese Kings. Asian Educational Services. p. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120610293. பார்க்கப்பட்ட நாள் 2016-09-27.