நளினி பாலா தேவி
நளினி பாலா தேவி (23 மார்ச் 1898– டிசம்பர் 24, 1977) இவர் ஒரு பிரபல இந்திய எழுத்தாளரும் மற்றும் அசாமி இலக்கியத்தின் கவிஞரும் ஆவார்.[1] தேசிய மற்றும் மாய கவிதைகளுக்கு பெயர் பெற்றவர்.[2] இலக்கியத்திற்கான பங்களிப்புக்காக 1957 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் 1968 ஆம் ஆண்டில் தனது கவிதைத் தொகுப்பான அலகானந்தாவுக்கு சாகித்ய அகாதமி வழங்கிய சாகித்ய அகாடமி விருதை வென்றார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
அவர் 1898, அசாமில் குவகாத்தியில் பிறந்தார். அவரது தந்தை கர்மவீர் நபின் சந்திரா போர்தோலோய் (1875-1936), ஒரு பிரபல அசாமிய இந்திய சுதந்திர இயக்க ஆர்வலரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார். அவர் தனது முதல் கவிதையான பிட்டாவை 10 வயதில் எழுதினார். மேலும் 12 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஆரம்பத்திலேயே இவருக்கு சோகம் ஏற்பட்டது. அவரது கணவர் ஜீஷ்வர் சாங்ககோட்டி 19 வயதாக இருந்தபோது இறந்துவிட்டார். அவர் தனது இரண்டு மகன்களையும் தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் இழந்தார். வாழ்க்கையில் நடந்த இந்த துன்பகரமான சம்பவங்கள் அவரை உடைக்க முடியவில்லை, மேலும் அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார். உணர்ச்சி, சோகம், தேசபக்தி மற்றும் பக்தி ஆகியவற்றை மைய கருப்பொருளாகக் கொண்டு இவர் எழுதியவை அசாமி இலக்கியங்களில் இன்றும் பாராட்டப்பட்டவை.[3][4]
1928 இல் வெளியிடப்பட்ட அவரது முதல் கவிதை புத்தகம் சந்தியார் சுர் (ஈவினிங் மெலடி) என்பதாகும்.[5] பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் குவஹாத்தி பல்கலைக்கழகம் முறையே 1946 மற்றும் 1951 ஆம் ஆண்டுகளில் ஒரு பாடப்புத்தகமாக ஏற்றுக்கொண்டது.
படைப்புகள்
அவரது மற்ற படைப்புகளில் அலகானந்தா, சோபுனார் சுர் (கனவுகளின் மெலடி), போரோஷ் மோனி, யுகா தேவதா (கதாநாயகனின் வயது), ஷேஷ் பூஜா (கடைசி வழிபாடு), பரிஜேட்டர் அபிஷேக், பிரஹ்லாத், மேகதட், சுரவி, ரூப்ரேகா, சாந்திபாத் (கட்டுரைத் தொகுப்பு) , மற்றும் ஷேஷோர் சுர் (கடைசி மெலடி) என்பனவாகும்.[4][5]
ஸ்மிருதிர் தீர்த்தா (அவரது தந்தையின் வாழ்க்கை வரலாறு), பிஸ்வதீபா (பிரபல பெண்களின் சுயசரிதைகளின் தொகுப்பு), எரி ஓஹா தின்பூர் (நாட்கள் கடந்து, சுயசரிதை), சர்தார் வல்லவபாய் படேல் போன்றவை அவரது வாழ்க்கை வரலாற்றுப் படைப்புகள் ஆகும்.[6]
1950 ஆம் ஆண்டில், அவர் சடோ அசோம் பரிஜத் கானனை நிறுவினார். பின்னர் அது அசாமில் குழந்தைகள் அமைப்பான மொய்னா பாரிஜத் என்று பிரபலமானது. மீராபாய் என்ற ஒரு நாடகத்தை அவரது கணக்கில் வரவு வைத்திருந்தார்.
நூற்பட்டியல்
- சந்தியார் சுர் (ஈவினிங் மெலடி, 1928)
- சோப்புனர் சுர் (மெலடி ஆஃப் ட்ரீம்ஸ், 1943)
- ஸ்மிருதி தீர்த்த (சுயசரிதை, 1948)
- பரோஷ்மோனி (டச்ஸ்டோன், 1954)
- ஜக்ரிதி (விழிப்பு, 1962)
- அலகானந்தா (1967) [4]
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
இவருக்கு 1968 ஆம் ஆண்டில் அவரது கவிதைத் தொகுப்பான அலகானந்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.[7] மற்றும் 1957 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.[8] அவர் 1955 இல் அசாம் இலக்கிய மன்றத்தின் 23 வது ஜோர்ஹாட் அமர்வின் தலைவராக இருந்தார்.[9]
குவகாத்தியின் காட்டன் கல்லூரி 1986 ஆம் ஆண்டில் தனது பெண்கள் விடுதிக்கு 'பத்மஸ்ரீ நளினி பாலா தேவி பெண்கள் விடுதி 'என்று பெயரிட்டது.[10]
இறப்பு
அவர் 1977 டிசம்பர் 24, அன்று இறந்தார் ஆனால் அவரது புகழ்பெற்ற கவிதை நாட்கர் (தி தியேட்டர்) இன் கடைசி நான்கு வரிகளால் அசாமி இலக்கியத்தில் நினைவுகூரப்படுகிறது.
மேலும் படிக்க
- Das, Sisir Kumar (1995). History of Indian Literature: 1911–1956: struggle for freedom: triumph and tragedy, Vol. 2. சாகித்திய அகாதமி. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7201-798-9. https://books.google.com/books?id=sqBjpV9OzcsC&pg=PA359&lpg=PA359&dq=nalini+bala+devi+poem&source=bl&ots=D9adF6phHo&sig=MbpM2rmJ2KjJZuGLSoFkvFicqUI&hl=en&sa=X&ei=OrFYUKvYL87rrQf_uYHgDQ&ved=0CDsQ6AEwAQ#v=onepage&q=nalini%20bala%20devi%20poem&f=false.
- Nalini Natarajan; Emmanuel Sampath Nelson (1996). Handbook of Twentieth-Century Literatures of India. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0313287783. https://books.google.com/books?id=1lTnv6o-d_oC&pg=PA31&lpg=PA31&dq=Nabin+Chandra+Bordoloi&source=bl&ots=uc6R2mGUHx&sig=ElfrfZdPbqs9aFEbpsXdZjeNh60&hl=en&sa=X&ei=wqRZUL-nMo6qrAei8ID4Cw&ved=0CFsQ6AEwCA#v=onepage&q=Nabin%20Chandra%20Bordoloi&f=false.
- Preeti Barua (2000). Nalinibala Devi. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8126009160. https://books.google.com/books?id=d3PfztHTv0sC&pg=PA20&lpg=PA20&dq=Nalini+bala+Devi&source=bl&ots=5DCN0a3DEf&sig=E3rm7bnEsiovFC5CAbH5g8FxJoU&hl=en#v=onepage&q=Nalini%20bala%20Devi&f=false.
குறிப்புகள்
- ↑ "An author & a trailblazer personality". The Telegraph. 9 February 2004. http://www.telegraphindia.com/1040209/asp/northeast/story_2872795.asp. பார்த்த நாள்: 18 September 2012.
- ↑ Das, p. 197
- ↑ "Nalinibala Devi remembered". Assam Tribune. 1 January 2009 இம் மூலத்தில் இருந்து 17 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130117184444/http://www.assamtribune.com/scripts/details.asp?id=jan0109/State6. பார்த்த நாள்: 18 September 2012.
- ↑ 4.0 4.1 4.2 Natrajan, p. 31
- ↑ 5.0 5.1 Barua, p. 15
- ↑ Barua, p. 20
- ↑ "Sahitya Akademi Award year wise". Official listings, சாகித்திய அகாதமி website. http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/searchAwards.jsp.
- ↑ "Padma Awards Directory (1954–2009)". Ministry of Home Affairs இம் மூலத்தில் இருந்து 10 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130510095705/http://www.mha.nic.in/pdfs/LST-PDAWD.pdf.
- ↑ Presidents of Asam Sahitya Sabha since 1917 பரணிடப்பட்டது 2013-01-29 at the வந்தவழி இயந்திரம் Asam_Sahitya_Sabha website.
- ↑ Padmashree Nalini Bala Devi Girls’ Hostel Cotton College, Guwahati