நந்தினி ராய்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நந்தினி ராய்
பிறப்புநீலம் கௌரானி[1][2]
சிக்கந்தராபாத், தெலங்காணா, இந்தியா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது வரை

நீலம் கௌரானி (Neelam Gouhrani) தொழில் ரீதியாக நந்தினி ராய் ( Nandini Rai ) என்று அழைக்கப்படும் இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பணிபுரியும்[3] ஓர் இந்திய நடிகையும், வடிவழகியுமாவார். 2010 ஆம் ஆண்டின் "மிஸ் ஆந்திரப் பிரதேசம்" பட்டத்தை வென்ற [4] பின்னர் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது.

சொந்த வாழ்க்கை

நந்தினி சிந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்.[1][2] ஐதராபாத்தில் உள்ள செயின்ட் அல்பன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். 2005 இல் பட்டம் பெற்றார். இலண்டனில் வணிக நிர்வாகத்தில் முதுநிலையை முடித்துள்ளார். 80 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பொருட்களின் விளம்பரங்களில் தோன்றியுள்ளார்.[5]

தொழில் வாழ்க்கை

பல அழகுப் போட்டிகளில் வென்றுள்ளார்.. குறிப்பாக, மிஸ் ஐதராபாத் 2008, மிஸ் ஆந்திரப் பிரதேசம் 2010, மிஸ் பாண்டலூன்ஸ் ஃப்ரெஷ் பேஸ் ஆஃப் ஏபி 2009 மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஐஸ் ஆஃப் ஏபி 2010.[5] போன்றவற்றைக் கூறலாம்

இவர் ஃபேமிலி பேக் என்ற இந்தி படத்திலும், தெலுங்கு படமான மாயாவிலும் நடித்துள்ளார். மற்றொரு தெலுங்கு திரைப்படமான மொசகல்லக்கு மொசகாடுவில் நடித்துள்ளார்.[5] 2012 இல், பாலிவுட் படமான லாக் இன் படத்திலும் காணப்பட்டார்.[2] ஏ. சஜீத்தின் குட்பை டிசம்பர் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார்.[5] 2014 இல், குஷி குஷியாகி[6] என்ற தனது முதல் கன்னடப் படத்தில் நடித்தார். அதில் ஆடை வடிவமைப்பாளராக நடித்திருந்தார்.[7] தனது முதல் தமிழ் படமான கிரஹணம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தெலுங்கு படமான சுடிகாடு 2 க்கு ஒப்பந்தம் செய்துள்ளார். அதில் அவர் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.[8] நடிகர் நானி தொகுத்து வழங்கிய உண்மைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 2 இன் போட்டியாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.[4]

சான்றுகள்

  1. 1.0 1.1 "New 'naughty' girl in town | Deccan Chronicle". Deccan Chronicle. Archived from the original on 2 March 2012. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  2. 2.0 2.1 2.2 Asha Prakash, TNN (27 February 2012). "Who inspired Nandini Rai's makeover?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 1 July 2012. பார்க்கப்பட்ட நாள் 17 August 2013.
  3. Pecheti, Prakash (21 May 2021). "Nandini Rai prefers intense roles". Telangana Today இம் மூலத்தில் இருந்து 21 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210608111558/https://telanganatoday.com/nandini-rai-prefers-intense-roles. 
  4. 4.0 4.1 "Who is Bigg Boss 2 Contestant Nandini Rai?". 18 June 2018.
  5. 5.0 5.1 5.2 5.3 Anasuya Menon (25 February 2012). "Hello Mollywood!". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 17 August 2013.
  6. "It's final, Ganesh's next is Kushi Kushiyalli - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  7. "Nandini Rai comes between Ganesh and Amoolya - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  8. "Nandini Rai to debut in Tamil - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நந்தினி_ராய்&oldid=22960" இருந்து மீள்விக்கப்பட்டது