த புரபெட்
நூலாசிரியர் | காலில் சிப்ரான் |
---|---|
உண்மையான தலைப்பு | The Prophet |
மொழி | ஆங்கிலம் உட்பட நாற்பது மொழிகளில் |
வகை | உரைநடைக் கவிதை |
வெளியிடப்பட்ட நாள் | 1923 |
அடுத்த நூல் | தி கார்டன் ஆப் த புரபெட் |
த புரபெட் (The Prophet) என்பது 26 உரைநடைக் கவிதை, கட்டுரைகளை கொண்ட லெபனானின் ஓவியர், தத்துவஞானி, எழுத்தாளர், காலில் சிப்ரான் எழுதிய ஆங்கில புத்தகம்.[1] இப்புத்தகத்தை 1923ஆம் ஆண்டு ஆல்ப்ரெட் ஏ. க்நோப் என்பவர் பதிப்பித்தார். காலில் சிப்ரானின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படும இப்புத்தகம், நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில், மொழிபெயர்க்கப்பட்டது.[2]
தி ப்ரோபட் சுருக்கம்
இறைவாக்கினர், அல்முஸ்தபா, தன்னுடைய ஊரை விடுத்து வேறு இடத்தில் 12 ஆண்டுகள் தங்கிவிட்டு, தன்னுடைய ஊருக்குத் திரும்ப கப்பலில் பயணிக்கிறார். அச்சமயத்தில், ஒரு குழுவினரால் அவர் தடுக்கப்பட்டு, அவர்களுடன் வாழ்க்கையைப் பற்றியும், மனித சமூகம் பற்றியும் நடத்தும் விவாதமே இப்புத்தகத்தின் மையக்கரு. இப்புத்தகம் காதல், திருமணம், குழந்தைகள், பிறருக்கு கொடுத்தல், சாப்பிடுதலும் பானம் குடித்தலும், பணி, மகிழ்ச்சியும் சோகமும், வீடுகள், ஆடைகள், வாங்குதலும் விற்பனை செய்தலும், குற்றமும் தண்டனையும், சட்டங்கள், விடுதலை, வலி, சுய-அறிவு, கற்பித்தல், நட்பு, பேசுதல், நேரம், நல்லதும் கெட்டதும், வழிபாடு, அழகு, ஆன்மீகம் மற்றும் இறப்பு என பல்வேறு வகையான பகுப்புகளை உள்ளடக்கியது.
புகழ்
விற்பனையின் அடிப்படையில் கணிப்பது கடினமானதாயினும், சேக்ஸ்பியர் மற்றும் லாவோசீவிற்கு பிறகு உலகில் அதிகப்படியான மக்களால் படிக்கப்பெற்றது காலில் சிப்ரான் எழுதி நாற்பது மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும்.[3] தி ப்ரோபட் நூல் தன்னுடைய 163-வது பதிப்பில், சுமார் 100 மில்லியன் பதிப்புககளுக்கு மேல் விற்பனையானது,[4] இதனுடைய முதல் பதிப்பு 1923-ம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தகுந்தது.[5] தி ப்ரோபட் அமெசான் இணையத்தில் அதிகமான விற்பனையான நூலாகும்.[6]
க்னோப் 1923-ம் ஆண்டு தான் அச்சடித்த முதல் 2,000 பிரதிகளில் 1,159 பிரதிகளை விற்றுத்தீர்த்தார், அப்புத்தகத்திற்கு கிடைத்த பலத்த ஆதரவினால், அடுத்த ஆண்டு இரண்டு மடங்கு புத்தகங்களை அச்சடித்தார், அதற்கு அடுத்த வருடமும் மேலும் இரண்டு மடங்கு புத்தகங்களை அச்சடித்தார். அதன்பிறகு இப்புத்தகம் அபரிவிதமான வளர்ச்சியை எட்டியது, 1935-ம் ஆண்டு 12,000 பிரதிகளும், 1961-ம் ஆண்டு 1,11,000 பிரதிகளும், 195-ம் ஆண்டு 2,40,000 பிரதிகள் விற்பனையானது. உலகம் முழுவதும் சேர்த்து, வாரமொன்றிற்கு சுமார் 5000 புத்தகங்கள் விற்பனையாகின்றது.[7]
காப்புரிமை
காலில் சிப்ரான் தன்னுடைய இறப்பிற்கு பிறகு, தன்னுடைய புத்தக உரிமைகளை தன்னுடைய சொந்த ஊரான லெபனானில் உள்ள ப்சாரி , என்ற ஊருக்கு எழுதி வைத்திருந்தார்.[8] ப்சாரியில் உள்ள கிப்ரான் தேசிய கூட்டமைப்பு (The Gibran National Committee - ஜி. என். சி), கிப்ரான் அருங்காட்சியத்தை மேலாண்மை செய்து வருகிறது. 1935-ம் ஆண்டு அமைக்கப்பெற்ற இந்த இலாப நோக்கற்ற நிறுவனம் காலில் சிப்ரானின் ஓவியங்கள் மற்றும் புத்தகங்களுக்கான உரிமையை கவனித்துக்கொள்கிறது.[9] 2009-ம் ஆண்டு, ஜி. என். சி., த ப்ரோபெட் திரைப்படம் தயாரிக்க ஐக்கிய அமெரிக்க நாட்டில் உள்ள த ப்ரொபட் எல். எல். சி. என்ற குழுவிற்கு அனுமதி வழங்கியது.
தி கார்டன் ஆப் தி ப்ரோபட்
தி ப்ரோபட் நூலைத் தொடர்ந்து, காலில் சிப்ரான் எழுதிய தி கார்டன் ஆப் தி ப்ரோபட் நூல், அவர் இறந்த பிறகு 1933-ம் ஆண்டு வெளியானது. தி கார்டன் ஆப் தி ப்ரோபட் என்ற நூலில் அல்முஸ்தபா திரும்பியதை தொடர்ந்து அவருடைய ஒன்பது சீடர்களுடன் நடந்த விவாதங்களை அல்முஸ்தபா கூறுவதாக அமையப்பெற்றுள்ளது.
பதிப்புகள்
இந்நூலை பேரறிவாளன் என்ற தலைப்பில் தமிழில் ப. யூ. அய்யூப் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். பல்வேறு காலகட்டங்களில் ஒலிக்கோப்புகளும், இசை வடிவமாகவும், திரைப்படமாகவும் இந்நூல் வெளிவந்துள்ளது.
குறிப்புகள்
- ↑ "Prophet Motive", Joan Acocella newyorker.com (ஆங்கில மொழியில்)
- ↑ Kalem, Glen (2018-06-26). "The Prophet Translated". The Kahlil Gibran Collective. www.kahlilgibran.com. Retrieved 2018-11-21.
- ↑ நியூயார்க்கர் இணையத்தில்
- ↑ இணைய நூலகத்தில்
- ↑ நியூயார்க்கர் இணையத்தில்
- ↑ அமெசான் இணையத்தில்
- ↑ "டைம் நாளிதழில்" இம் மூலத்தில் இருந்து 2012-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120512200032/http://www.time.com/time/magazine/article/0,9171,834246,00.html#ixzz0czyJFJkd.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120512200032/http://www.time.com/time/magazine/article/0,9171,834246,00.html#ixzz0czyJFJkd.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090923201444/http://friendsofgibran.org/html/gibran_national_committee.html.
வெளி இணைப்புகள்
- The Prophet ஒலிக் கோப்பு
- The Garden of the Prophet ஒலிக் கோப்பு - 2
- The Prophet
- ஒலிக் கோப்பு தெலுங்கில் பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்
- பெரிய கார்ட்டூன் தரவுதளத்தில் The Prophet (Animated Film)