த. வே. இராதாகிருட்டிணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

த. வே. இராதாகிருட்டிணன் (நவம்பர் 2, 1885 - ) கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர். இதனால் இவர் சங்கம் நிறுவிய துங்கன் என அழைக்கப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

த. வே. இராதாகிருட்டிணன் 1885 ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாம் நாள் வேம்பப் பிள்ளை, தாயார் காமாட்சியம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். தஞ்சாவூர், தூய பேதுரு கல்லூரியில் கல்வி பயின்றார். இவருடன் உடன் பயின்ற இவரது ஆருயிர் நண்பர் கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் ஆவார்.[1] தனுக்கோடி கடற்சுங்கத் ஆய்வுக் கழகத் தலைமைத் தாளாளராகப் பணியாற்றினார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத் தோற்றம்

1901 ஆம் ஆண்டு தோன்றிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழழக்கள், தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில், மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. அதன் பயனாய் ஆங்காங்கே, பல சங்கங்களும், கழகங்களும் தோன்றலாயின. தஞ்சையில் வித்தியா நிகேதனம் என்னும் பெயரில் தமிழ்ச் சங்கம் ஒன்று தொடங்கப் பெற்றது. அரித்துவாரமங்கலம் பெருவள்ளல் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் இச்சங்கத்தின் தலைவர். வி. சாமிநாதபிள்ளை செயலாளர். இராதாகிருட்டிணன், கரந்தைக் கவியரசு போன்றோர் இச்சங்கத்தில் உறுப்பினராய் இணைந்தனர்.

சங்கத் தலைவர் இராசாளியார் மிகவும் கண்டிப்பானர். செயலாளர் சாமிநாத பிள்ளை இராதாகிருட்டிணன் போன்ற இளைஞர்களிடத்து தம் ஆணையைச் செலுத்தத் தொடங்கினார். இதனால் தாமே தனியாக ஒரு தமிழ்ச் சங்கத்தைத் தோன்றுவித்தால் என்ன என்ற எண்ணம் அவ்விளைஞர்களிடையே உருவெடுத்தது. இவ்வெண்ணத்தின் பயனாய், த. வே. இராதாகிருட்டிணன் 1914 ஆம் ஆண்டு மே திங்கள் 14 ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கினார்.[2]

இராதாகிருட்டிணன் கடற் சுங்கத் துறையில் பணியாற்றியதால், தொடர்ந்து சங்கப் பணிகளைப் பார்க்க இயலாது என்பதால், தனது தமையனார் தமிழவேள் த. வே, உமாமகேசுவரனாரை கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவராக்கினார்.[3]

மேற்கோள்கள்

  1. கரந்தைக் கவியரசு அவர்களின் ஆசானாற்றுப்படை நூலின் முகவுரை
  2. {கரந்தைத் தமிழ்ச் சங்க முதலாம் ஆண்டு அறிக்கை 1911}
  3. {கரந்தைத் தமிழ்ச் சங்க முதலாம் ஆண்டு அறிக்கை 1911}
"https://tamilar.wiki/index.php?title=த._வே._இராதாகிருட்டிணன்&oldid=27735" இருந்து மீள்விக்கப்பட்டது