கரந்தைத் தமிழ்ச் சங்கம்
கரந்தைத் தமிழ்ச் சங்கம் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தமிழ்ச் சங்கமாகும். தமிழ் மொழியை மேம்படுத்துவதற்காக 1911 ஆம் ஆண்டில் இந்தச் சங்கம் நிறுவப்பட்டது. இது நவீன தமிழ்ச் சங்கங்களில் ஒன்றாகும்.
வரலாறு
கரந்தைத் தமிழ்ச் சங்கம் 14 மே 1911 அன்று தமிழ்நாட்டின் தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியான கருந்தட்டைகுடியில் (கரந்தை என்றும் அழைக்கப்படுகிறது) நிறுவப்பட்டது. இந்த சங்கத்தை ராதாகிருஷ்ண பிள்ளை தனது சகோதரர் உமாமகேசுவர பிள்ளையை முதல் தலைவராகக் கொண்டு நிறுவப்பட்டது. [1] [2] பிறாகாலத்தில் எந்த ஒரு தனிநபரும் உரிமை கொண்டாட முடியாதவாறு 1860இல் 21வது சட்டப்பிரிவின்படி ஆனந்த சித்திரை ஆண்டு பத்தாம் நாள் (15. மே. 1914) சங்கம் பதிவு செய்யப்பட்டது.[3]
செயல்பாடுகள்
தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை 1920 ஆம் ஆண்டில் நிறைவேற்றியது.[4] தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தனாரின் நீராரும் கடலுடுத்த பாடலை பாட வேண்டும் என்ற கோரிக்கை 1913 ஆம் ஆண்டு கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 1914 முதல் கரந்தை தமிழ் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிவந்தனர். அதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு அரசு அப்பாடலை தம்ழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.[5] 1937 ஆம் ஆண்டு ஆகத்து 27 அன்று நடந்த கூட்டத்தில், கல்வி நிறுவனங்களில் இந்தி திணிக்கப்பட்டதை இச்சங்கம் கண்டித்தது. [6]
இச்சங்கம் 1925 ஆம் ஆண்டில் எழுத்தறிவைத் தரும் இதழான தமிழ் பொழிலைத் தொடங்கியது.[1] இச்சங்கம் தமிழ் இலக்கியம் குறித்த மாதாந்திர கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்துகிறது. [7] இச்சங்கம் தமிழ்க் கல்வியை வழங்க கல்வி நிறுவனங்களை நிறுவியது.
மேலும் காண்க
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 A handbook of Tamil Nadu.
- ↑ "Tamil literatteurs honoured". Hindustan Times. February 16, 2006.
- ↑ "தமிழ்த்தாய் வாழ்த்து: ஒரு நூற்றாண்டு வரலாறு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
- ↑ "NEED TO RECOGNIZE TAMIL AS A CLASSICAL LANGUAGE". Parliament of India. 10 March 1997.
- ↑ "தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக அறிவிப்பு: பாடும்போது எழுந்து நிற்க அரசு உத்தரவு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-12-19.
- ↑ Towards a Non-Brahmin Millennium: From Iyothee Thass to Periyar.
- ↑ Public associations in India.