த. ஆனந்த கிருஷ்ணன்
த. ஆனந்த கிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 1, 1938 கோலாலம்பூர், மலேசியா |
பணி | முழு பங்குதாரர் TAK Corporate Holdings Sdn Bhd தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் Usaha Tegas Group Holdings Bhd |
சொத்து மதிப்பு | $9.5 பில்லியன் (2011)[1] |
பிள்ளைகள் | 3 |
த. ஆனந்தகிருஷ்ணன் (பி. 1938) மலேசியா தொழிலதிபர். மலேசியத் தமிழரான இவர் கோலாலம்பூரில் இருக்கும் பெட்ரோனாஸ் டவர் எனப்படும் மாபெரும் கட்டடத்தைக் கட்டியவர். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். 2007 இல் இவரது சொத்து மதிப்பு 7.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவரது மூதாதையர் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வாழ்க்கை வரலாறு
ஆனந்த கிருஷ்ணன் 1938 ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலும்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் பகுதியல் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். அவரின் முன்னோர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள்.
கோலாலும்பூர் பிரிக்பீல்ட்சில் உள்ள விவேகானந்தா தமிழ் பள்ளியில் பள்ளி கல்வி பெற்றார். உயர்பள்ளி படிப்பை கோலாலும்பூரில் உள்ள விக்டோரியா கல்வியகத்தில் பயின்றார். பிறகு பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பின் கொழும்பு திட்டத்தின்கீழ் இளங்கலை பட்டம் - அரசியல் அறிவியல் புலத்தில் ஆஸ்திரேலியா மெல்பேர்ண் பல்கலைக்கழகம் கல்வி பயின்றார். உயர்கல்வியை அமெரிக்க ஐக்கிய நாடுகள் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் பயின்று முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார்
வணிகம்
இவர் மலேசிய மேக்சிஸ் கம்யுநிகேசன் மற்றும் இந்திய ஏர்செல் நிறுவனங்களின் முதன்மை பங்குதாரர்
வெளி இணைப்பு
- [1] பரணிடப்பட்டது 2007-02-11 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ "Forbes List of Billionaires 2011". Forbes. http://www.forbes.com/profile/ananda-krishnan/. பார்த்த நாள்: 2012-02-20.