தொழுவை
7°11′0″N 80°36′0″E / 7.18333°N 80.60000°E
தொழுவை | |
மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - கண்டி |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 611 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் தொகை (2001) |
45102 |
தொழுவை | |
---|---|
ஆள்கூறுகள்: 7°11′0″N 80°36′0″E / 7.18333°N 80.60000°E |
தொழுவை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். தொழுவை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து தென்மேற்குத் திசையில் அமைந்துள்ளது. தொழுவை இலங்கையி நீளமான ஆறான மகாவலி கங்கையின் கரையில் அமைந்துள்ளது. மேலும் கமபளைக் கண்டி இடையிலான மாற்றுப்பாதையூடாக அமைந்துள்ளது.
புவியியலும் காலநிலையும்
தொழுவை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 611 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 45102 | 32100 | 1155 | 9619 | 2155 | 21 | 52 |
கிராமம் | 37221 | 31018 | 572 | 3454 | 2115 | 17 | 42 |
தோட்டப்புறம் | 7881 | 1082 | 583 | 6165 | 40 | 4 | 6 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 45102 | 31928 | 10010 | 2231 | 589 | 327 | 17 |
கிராமம் | 37221 | 30856 | 3552 | 2177 | 420 | 205 | 11 |
தோட்டப்புறம் | 7881 | 1072 | 6458 | 54 | 169 | 122 | 6 |
கைத்தொழில்
இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலைப் பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. மணல் அகழ்வும் முக்கிய இடத்தைப் பெற்றுவருகின்றது.
குறிப்புகள்
உசாத்துணைகள்
இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
மாநகரசபைகள் | கண்டி | மாத்தளை | நுவரெலியா | |
நகரசபைகள் | நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன | |
சிறு நகரங்கள் | அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை |