தலவாக்கலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

6°56′56″N 80°39′43″E / 6.94889°N 80.66194°E / 6.94889; 80.66194

தலவாக்கலை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1216 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


தலவாக்கலை
தலவாக்கலை is located in இலங்கை
தலவாக்கலை
தலவாக்கலை
ஆள்கூறுகள்: 6°56′56″N 80°39′43″E / 6.94889°N 80.66194°E / 6.94889; 80.66194

தலவாக்கலை (Talawakelle) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் நுவரெலியா நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் கொட்டகலைக்கும் நானு ஓயாவுக்குமிடையே அமைந்துள்ளது. இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கொட்டகலை, வட்டகொடை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

இது மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறான கொத்மலை ஓயா இந்கரை ஒட்டி பாய்கிறது. இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு சில நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் அரசியல் நிர்வாகம் தலவாக்கலை-லிந்துலை இணைந்த நகரசபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் தேயிலைத் துறையில் முக்கிய நகரங்களில் ஒன்றான தலவாக்கலையில் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது[1]. இயற்கை அழகு மிக்க இப்பிரதேசத்தில் டெவோன், புனித கிளயார் , புனித அன்றுவ் போன்ற இலங்கையின் பிரசித்தமான நீர்வீழ்ச்சிகள் பல் அமைந்துள்ளன. யப்பான் நாட்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி திட்டம் காரணமாக நகரின் பெரும் பகுதி நீருள் மூழ்கவுள்ளதால் நகரை வேறு பிரதேசத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆதாரம்

படங்கள்

மேற்கோள்கள்

  1. "Tea Research Institute, Sri Lanka". பார்க்கப்பட்ட நாள் மே 20, 2013.


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://tamilar.wiki/index.php?title=தலவாக்கலை&oldid=39295" இருந்து மீள்விக்கப்பட்டது