தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை
Jump to navigation
Jump to search
தொல்காப்பியம் நூலுக்கு எழுதப்பட்டுள்ள உரைகளில் இதுவும் ஒன்று. இதனை எழுதியவர் கல்லாடர். இவரைக் கல்லாடனார் எனக் குறிப்பிடுவாரும் உளர். நூலின் காலம் 15 ஆம் நூற்றாண்டு.
இவர் தமது உரையில் 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பிய இளம்பூரணர் உரையையும், 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருக்குறள் 13 ஆம் நூற்றாண்டு உரையிலிருந்தும் மேற்கோள்களைத் தந்துள்ளார். இவரது உரை 14 ஆம் நூற்றாண்டு நச்சினார்க்கினியரின் உரையைத் தழுவியே செல்கிறது.
இந்த உரை தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில் உள்ள 9 இயல்களில் முதல் 7 இயல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளன.
- இவரது உரையில் காணப்படும் சில விளக்கங்கள்
- அரவம், இசை, ஒலி என்பன எழுதப்படா ஓசையைக் குறிப்பன.
- கிளவி, மாற்றம், மொழி என்பன ஒழுதப்படும் ஓசையைக் குறிப்பன.
- எழுத்து மொழியிடை நின்று பொருள் உணர்த்தியவழிச் 'சொல்' எனப்படும்.
- உயர்நிணை என்பது மக்களாக நன்கு மதிக்கப்படும் பொருள். [1]
- மாஅஅல், கோஒஒல் என இரண்டு அளபெடை எழுத்துகளைத் தந்து அளபெடைக்கு இவர் மேற்கோள் தருவது புதுமை. [2]
- சொல் இலக்கணத்தை இவர் திணை, பால், எண், இடம், வேற்றுமை, தொகை, இடம், காலம், வழக்கு என எட்டு வகையில் ஆராய்ந்துள்ளார். [3]
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
- தொல்காப்பியம், சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தியுரையும், பழைய உரையும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியடு, 1964