தொல்காப்பியம் குற்றியலுகரப் புணரியல் செய்திகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. முதலாவது எழுத்ததிகாரத்தில் ஒன்பதாவது இயல் குற்றியலுகரப் புணரியல். இந்த இந்த இயலில் உள்ள செய்திகள் நூற்பா வரிசை-எண்ணோடு தரப்பட்டுள்ளன. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரைத் தழுவித் தொகுக்கப்பட்டுள்ளன.

(ஆறு வகையான குற்றியலுகர மொழி உயிரெழுத்து வரும்போது குற்றியலுகரமாகவும், உயிர்மெய் வரும்போது முற்றியலுகரமாகவும், யா-எழுத்து மொழி வரும்போது குற்றியலிகரமாகவும் ஒலிக்கும்.)

குற்றியலுகரம் 6 வகை

  • 1.ஈரெழுத்தொருமொழி, 2.உயிர்த்தொடர், 3.இடைத்தொடர், 4.ஆய்தத் தொடர்மொழி, 5.வன்தொடர், 6.மென்தொடர்
1.நாகு, 2.வரகு, 3.தெள்கு, 4.எஃகு, 5.கொக்கு, 6.குரங்கு -1
  • இரண்டு ஒற்றுக்கள் தொடரும் மொழி இடைத்தொடர் ஆவதில்லை.
ஈர்க்கு – வன்தொடர், மொய்ம்பு – மென்தொடர் -2
  • வேற்றுமையிலும், அல்வழியிலும் மெய்யில் தொடங்கும் சொல் வரும்போது குற்றியலுகரம் முற்றியலுகரமாக ஒலிக்கும்
நாகு கடிது, நாகு கடுமை, வரகு கடிது, வரகு கடுமை -3
  • கொக்குக் கடிது, கொக்குக் கடுமை (வல்லொற்றுத் தொடர்மொழி முன் வல்லினம்) -4

குற்றியலிகரம்

  • குற்றியலுகர மொழி யா வரும்போது குற்றியலிகரமாக மாறும்.
நாகியாது, வரகியாது, தெள்கியாது, உஃகியாது, கொக்கியது, குரங்கியாது -5

குற்றுகரப் பொதுப்புணர்ச்சி

முயிறு
  • ஈரெழுத்து, உயிர்த்தொடர் – டகார றகார குற்றியலுகரம் -6
யாட்டுக்கால், முயிற்றுக்கால் எனத் தன்னொற்று இரட்டி, வருமொழியின் வல்லினம் மிகும்
யாட்டுச்செவி, யாட்டுத்தலை, யாட்டுப்புறம், முயிற்றுச்செவி, துயிற்றுத்தலை, முயிற்றுப்புறம்
  • ஈரெழுத்து, உயிர்த்தொடர் – கசதப - குற்றியலுகரம் -7
(ஒற்றிடை இனம் மிகாதவை) நாகுகால், வரகுகதிர்
  • இடையொற்று, ஆய்தத்தொடர் இயல்பு -8
தெள்குகால், எஃகுகால் (தெள்கு = தெள்ளுப் பூச்சி) (எஃகு = வேல்)
  • வன்தொடர் ஒற்று மிகும்
கொக்குக்கால் -9
  • மென்தொடர் வல்லினமாகி ஒற்று மிகும்
(குரங்கு)குரக்குக்கால், (எண்கு)எட்குக்கால்,
கொக்கின்கால், குரங்கின்கால் (எண்கு = கரடி) -9
  • மரப்பெயர் அம்-சாரியை பெறும் -10
(தேக்கு)தேக்கங்கோடு, (வேம்பு)வேப்பம்பழம்
  • மென்தொடர் வல்லினம் ஆகா மரம் -11
குருந்தங்கோடு, புன்கங்கோடு
  • அம்-சாரியை பெறல் -12
(ஏறு)ஏறங்காள், (வட்டு)வட்டம்போர்
  • அக்கு-சாரியை பெறல் -13
குன்றக்கூகை
  • எண்ணுப்பெயர் -14
ஒன்றன்கால் (=ஒன்றினது கால்)

குற்றுகரச் சிறப்புப்புணர்ச்சி

  • வண்டு, பெண்டு
கண்டின்கால், பெண்டின்கால் (+இன்-சாரியை) (இஃது அஃறிணை முடிபு) -15
  • பெண்டு
பெண்டன் கை (+அன்-சாரியை) (இஃது உயர்திணை முடிபு) -16
  • யாது, அஃது
யாதன் கோடு, அதன் கோடு -17
  • அஃது
அஃதடை (அஃது+அடை) (அடை = இலை) (உயிர் வரும்போது) -18
  • அது
அது கடிது (அல்வழிப் புணர்ச்சி) -19
  • அல்வழியில் பிற
நாகு கடிது, வரகு கடிது, தெள்கு கடிது, எஃஃகு கடிது, குரங்கு கடிது (இயல்பு) -20
  • வல்லொற்றுத் தொடர்மொழி
கொக்குக் கடிது, கொக்குச் சிறிது, கொக்குத் தீது, கொக்குப் பெரிது (வல்லினம் மிகல்) -21
  • ஆங்கு, யாங்கு
ஆங்குக் கொண்டான், யாங்குக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் -22
  • யாங்கு (=எப்படி)
யாங்கு கொண்டான் -23
  • அங்கு, இங்கு, உங்கு, எங்கு (நான்கும் மிக்கே வரும்)
அங்குக் கொண்டான், இங்குக் கொண்டான், உங்குக் கொண்டான், எங்குக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் -24
  • உண்டு
உள் பொருள், உண்டு பொருள், உண்டு காணம், உண்டு சாக்காடு, உண்டு தாமரை, உண்டு ஞாண், உண்டு நூல், உண்டு மணி, உண்டு யாழ், உண்டு வட்டு, உண்டு அடை, உண்டு ஆடை -25
  • திசைச்சொல்
வடக்கே தெற்கு (=வடக்கிலும் தெற்கிலும்), கிழக்கே மேற்கு -26
  • திசைச்சொல்
வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு -27

குற்றுகர எண்ணுப்புணர்ச்சி

  • பதினொன்று, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு -28
  • பன்னிரண்டு -29
  • பதினாயிரம் -30
  • பதின்கலம் (அளவுப்பெயர்) பதின் கழஞ்சு (நிறைப்பெயர்) -31
  • ஒருபஃது, இருபஃது -32
  • ஒருபஃது (ஒன்று <> ஒரு) -33
  • இருபஃது -34
  • முப்பஃது, -35 (அறுபஃது)
  • நாற்பஃது -36
  • ஐம்பஃது -37
  • எண்பஃது -38
  • தொண்ணூறு (ஆடுபுலி விளையாட்டு) -39
  • ஒருகலம், இருகலம் -40
  • முக்கலம், முச்சாடி -41
  • ஐங்கலம், ஐஞ்சாடி -42
  • அறுகலம், அறுசாடி, அறுசுவை -43
  • எண்கலம், எண்சாடி எண்நாழி, எண்மண்டை, எண்வட்டி, எண்ணகல் (எட்டு+அகல்) -44
  • முந்நாழி, மும்மண்டை, ஐந்நாழி, ஐம்மண்டை -45
  • முவ்வட்டி -46
  • நால்வட்டி -47
  • ஐவட்டி – 48
  • ஓரகல், ஈரகல், ஓருழக்கு, ஈருழக்கு -49
  • முவ்வகல், முவ்வுழக்கு -50
  • மூவுழக்கு -51
  • ஆறகல், ஆறுழக்கு -52
  • ஒன்பதின் கலம், ஒன்பதின் சாடி -53
  • ஒருநூறு, இருநூறு, அறுநூறு -54
  • முந்நூறு -55
  • நானூறு -56
  • தொள்ளாயிரம் -57
  • ஒராயிரம், இராயிரம் -58
  • ஓராயிரம், ஈராயிரம் -59
  • முவ்வாயிரம் -60
  • நாலாயிரம் -61
  • ஐயாயிரம் -62
  • ஆறாயிரம் -63
  • ஒன்பதினாயிரம் -64
  • ஒரு நூறாயிரம், இரு நூறாயிரம், இரண்டு நூறாயிரம், முந் நூறாயிரம், மூன்று நூறாயிரம், நானூறாயிரம், நான்கு நூறாயிரம், ஐந் நூறாயிரம், ஐந்து நூறாயிரம், அறு நூறாயிரம், ஆறு நூறாயிரம், எண் நூறாயிரம், எட்டு நூறாயிரம், ஒன்பது நூறாயிரம், -65
  • நூற்றொன்று, நாற்றிரண்டு, நூற்று முன்று, நூற்று நான்கு, நூற்று ஐந்து, நூற்று ஆறு, நூற்று ஏழு, நூற்று எட்டு, நூற்று ஒன்பது -66
  • நூற்றொருபஃது, நூற்றிருபஃது, நூற்று முப்பது -67
  • நூற்றுக்கலம், நூற்றுச்சாடி, நூற்றுக்கழஞ்சு, நூற்றுத்தொடி -68
  • ஒருபத்தொன்று, இருபத்தொன்று, முப்பத்தொன்று -69
  • ஒருபதினாயிரம், இருபதினாயிரம் -70
  • ஒருபதின்கலம், இருபதின்கலம், ஒருபதின் கழஞ்சு, இருபதின் கழஞ்சு -71
  • ஒருகல், ஒருசுனை, ஒருதுடி, ஒருபறை, ஒருஞாண், ஒருநூல், ஒருமணி, ஒருநாழ், ஒருவட்டு -72
  • ஒரடை, ஓரடை, இரடை, ஈரடை, இரண்டடை, இரண்டாடை – 73
  • இரண்டுமா (மா = 10இல் 1), இருமா, மூன்றுமா, மும்மா -74

எழுத்ததிகாரப் புறனடை

  • உம், கெழு ஆகிய இடைச்சொற்கள் செய்யுளில் வரும்
‘வானவரி வில்லும் திங்களும் கல்கெழு கானவன் நல்குறு மகளே’
(= அவன் மலைசூழ் கானவன். அவன் மகள் வானவில்லும் திங்களும் போன்றவள்) -75
  • மரூஉ மொழி -76 (குறைசொற்கிளவி, பண்புதொகுமொழி, தொழில்தொகுமொழி, எண்ணின்தொகுதி, உள்ளிட்ட பிற) இவற்றின் புணர்ச்சி தெளிவாக உணரும் வகையில் தோன்றாது
விண்வினைத்தது (=புண் விண் விண் எனத் தெறித்தது – இது குறிப்பின் வந்த குறைசொற்கிளவி)
கார் கறுத்தது (இதில் கார் என்பது கருமைப்பண்பை உணர்த்தும் குறைசொற்கிளவி)
ஒல்லொலித்தது (இதில் ஒல் என்பது இசையை உணர்த்தும் குறைசொற்கிளவி)
பண்புத்தொகையில் ஐம்பால் தொகும்
கருஞ்சான்றான் (கரியன் சான்றான்), கருஞ்சான்றாள் (கரியள் சான்றாள்), கருஞ்சான்றார் (கரியர் சான்றார்), கரும்பெற்றம் (கரியது பெற்றம்), கருமணிகள் (கரியன மணிகள்),
கொல்யானை (இது காலம் கரந்த பெயரெச்சம்),
ஓரொன்று, ஈரிரண்டு, மும்மூன்று – இவை எண்ணின் தொகுதி
  • கரியன் (கருமை+அவன்), உண்டான் (உண்+ட்+ஆன்(<>அவன்) – இவை பிற வகை மரூஉமொழிகள்
  • செய்யுள் திரிபு, வழக்கியல் மரூஉ, இயல்பு மாறி வருபவை ஆகியவற்றை நன்கு நாடி உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். -77

இணைப்பு