குற்றியலிகரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.[1][2][3]

எடுத்துக்காட்டு

  • நாடு + யாது -> நாடியாது
  • கொக்கு + யாது -> கொக்கியாது

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்

  • கேள் + மியா -> கேண்மியா
  • வால்+ மியா = வான்மியா
  • கண்டேன் + யான் -> கண்டேனியான் [4]

இவற்றையும் பார்க்கவும்

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் நூன்மரபு 2
  2. யகரம் வரு வழி இகரம் குறுகும்
    உகரக் கிளவி துவரத் தோன்றாது. - தொல்காப்பியம் குற்றியலுகரப் புணரியல் 5
  3. யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
    அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய - நன்னூல்
  4. வண்டலவர் கண்டே னியான் (கலித்தொகை 92-54)
"https://tamilar.wiki/index.php?title=குற்றியலிகரம்&oldid=13464" இருந்து மீள்விக்கப்பட்டது