தொல்காப்பியம் இடையியல் செய்திகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தொல்காப்பியம் தமிழின் மொழியியலைக் கூறும் நூல். இது எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தொல்காப்பியம் இடையியல் நூற்பா

இடைச்சொல் விளக்கம்

இடையியல் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் ஏழாவது இயலாக அமைந்துள்ளது.


இடையியல் சொல்லும் செய்திகள்

செய்திகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இடைச்சொல் - தொல்காப்பியர் விளக்கம்

இடைச்சொல் பற்றிய விளக்கங்கள் இவ்வியலின் முதல் இரு நூற்பாக்களில் கூறப்பட்டுள்ளன.

  • பெயரொடும் வினையொடும் நடைபெற்று இயலும்.
  • இடைச்சொல்லுக்கென்று தனி இயல்பு இல்லை.
  • சொற்கள் புணரும்போது அவற்றிற்கு இடையே நின்று அவற்றின் பொருளை உணர்ந்துகொள்ள உதவும்.
புணரியல் சாரியைகள்
  • வினைச்சொல்லில் காலம் காட்டும்.
செய்தான்(த்), செய்கிறான்(கிறு), செய்வான்(வ்) - போன்றவை
  • வேற்றுமை உருபு
ஐ, ஆல், கு, இன், அது, கண் - போன்றவை
  • அசைநிலைக் கிளவி
  • இசைநிறைக் கிளவி
  • உரிய குறிப்புப்பொருள்
  • ஒப்பு இல்லாப் பொருள்

இடைச்சொல்லுக்குப் புறனடை Addenda

  • கூறப்படாத பொருள் தோன்றினும் கொள்க. (நூற்பா 47)
  • கூறப்படாத பொருள் தோன்றினால் கூறப்பட்டவற்றோடு பொருத்திப் பார்த்துக்கொள்க. (நூற்பா 48)

இடைச்சொற்கள்

  • அகரவரிசைத் தொகுப்பு. ஒவ்வொரு சொல்லும் இந்த இயலில் எத்தனையாவது நூற்பாவில் விளக்கப்பட்டுள்ளது என்பது ஒவ்வொரு சொல்லுக்கும் பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

(1-10)

  1. அந்தில் – அந்தில் என்பது அசைநிலைக்கிளவி, இது ஆங்க என்னும் இடம்சுட்டு பொருளிலும் வரும் -19
  2. அம்ம – கேட்பிக்கும் -28
  3. அரோ – அசைநிலைக்கிளவி -31
  4. ஆக – பிரிவில் அசைநிலை -32
  5. ஆகல் – பிரிவில் அசைநிலை -32
  6. ஆங்க – உரையசை -29
  7. ஆர் – அசைநிலை -23, இயற்பெயர் முன் நின்றால் பன்மை-வினை கொண்டு முடியும் -22
  8. இக – முன்னிலை அசைச்சொல் -26
  9. இகும் – முன்னிலை அசைச்சொல் -26, இது தன்மை இடத்திலும் வரும் -27,
  10. உம் [1]

(11-20)

  1. எல் – இலக்கம் -21
  2. எற்று – இறந்த பொருள் -15
  3. என – வினை, குறிப்பு, இசை, பண்பு, எண், பெயர் - ஆகிய 6 வகையான சொற்களோடு வரும். -10
  4. என்பது – பிரிவில் அசைநிலை -32
  5. என்றா – எண்ணுப்பொருள் -41 \ என்றா – எண்ணும்போது தொகைச்சொல் பெற்றே முடியும் -42
  6. என்று – இசை, எண், குறிப்பு, பண்பு, பெயர், வினை (11) பிரிந்து சென்றும் ஒன்றும் (46)
  7. எனா – உம்மை தொக்க எண் -41 \ எனா – எண்ணும்போது தொகைச்சொல் பெற்றே முடியும் -42
  8. – ஈற்றசை,எண், தேற்றம், பிரிநிலை, வினா -9 \தெளிவு (அளபெடுக்கும்) -13 \ எண்ணும்போது இடை விட்டும் எண்ணப்படும் -40 \ எண்ணும்போது தொகைச்சொல் பெற்றே முடியும் -42 \ ஏ - (அன்றே) குறிப்பு -34 \ ஏ – (நன்றே) குறிப்பு -34 \ ஏ – அசைநிலை -24 \ ஏ – இசைநிறை -24 \ ஏ – ஈற்றில் ஓரசை ஆகலும் உரித்து -38 \
  9. – (அந்தோ) குறிப்பு -34 \ ஓ – (அன்னோ) குறிப்பு -34 \ ஓ – சிறப்பு (அளபெடுக்கும்) -13 \ ஓ – பிரிநிலை -8
  10. – (இறுதியில் உயிர்) அளபெடை, காலம் நோக்கிப் பொருள் தரும் -33

(21-30)

  1. கா – அசைநிலைக்கிளவி -31
  2. குரை – அசைநிலை -24 \ குரை – இசைநிறை -24
  3. கொன் – அச்சம், காலம், பயமிலி, பெருமை -6
  4. கொல் - ஐயம் -20
  5. சின் – தன்மை, படர்க்கை இடங்களிலும் வரும் -27 \ சின் – முன்னிலை அசைச்சொல் -26
  6. தஞ்சம் – எண்மை -18
  7. தில் – ஒழியிசைக்கிளவி, காலம், விழைவு (தன்மை) தில் – விழைவு -5
  8. பிற – அசைநிலைக்கிளவி -31 (பொருளில் பிற) அது பிற, இது பிற, உது பிற - இளம்பூரணர் உரை மேற்கோள் (இச்சொல் இடைச்சொல்லாக வரும்போது இக்கால வழக்கில் 'அப்புறம்' என்று வழங்கப்படுகிறது. ஒருவன் தாஆன் பேசிக்கொண்டேயிருக்கும்போது இடையிடையே 'அப்புறம்' என்னும் சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வது உண்டு. இதுதான் இடைச்சொல்)
  9. பிறக்கு – அசைநிலைக்கிளவி -31 அது பிறக்கு - இளம்பூரணர் உரை மேற்கோள்
  10. போ – அசைநிலைக்கிளவி -31

(31-41)

  1. போலும் (ஒப்பில் போலி) – உரையசை -30
  2. மதி – முன்னிலை அசைச்சொல் -26
  3. மற்று – அசைநிலை, வினைமாற்று -14
  4. மற்றையது – சுட்டுநிலை ஒழிய இனம் குறிக்கும் –16
  5. மன் – ஆக்கம், ஒழியிசைக்கிளவி, கழிவு -4
  6. மன்ற – தேற்றம் -17
  7. மா – வியங்கோள் அசைச்சொல் -25
  8. மாது – அசைநிலைக்கிளவி -31
  9. மியா – முன்னிலை அசைச்சொல் -26
  10. மோ – முன்னிலை அசைச்சொல் -26
  11. யா – அசைநிலைக்கிளவி -31

எடுத்துக்காட்டு விளக்கம்

  1. எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, ஆக்கம் என்னும் 8 பொருள்களில் வரும். (நூற்பா 7)
    எச்ச-உம்மையும் எதிர்மறை-உம்மையும் ஒன்றோடொன்று தமக்குள் மயங்குவதில்லை (நூற்பா 35)
    சாத்தனும் வந்தான், கொற்றனும் வந்தான் என வரும். சாத்தனும் வந்தான், கொற்றனும் வரவில்லை என எதிர்மறையாக மயங்குவதில்லை.
    செஞ்சொல்லாக எண்ணும்போது இறுதியில் சேர்க்கப்படும் (36)
    அடகு புலால் பாலிதமும் உண்ணான் கடல் போலும் கல்வியவன்.
    தொகைச்சொல்லில் (37)
    எல்லாரும் வந்தனர். எல்லாவற்றையும் கொண்டான். முழுதும் கொண்டான். அனைத்தும் கொண்டான்.
    எண்ணும்போது (39)
    நிலனும் நீரும் தீயும் வளியும் வெளியும் நல்ல. - என வரும்
    உருபு தொக்கும் வரும் (42)
    யானையும் தேரும் ஆளும் எறிந்தார் (ஐ-உருபு தொகையாயிற்று)
    உம் இடைச்சொல் உந்து எனவும் வரும்
    நீர்க்கோழி கூஉப்பெய்குந்து (புறநானூறு 395)

கருவிநூல்

  1. தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
  2. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் பதிப்பு, 1934
  3. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, டாக்டர் P.S. சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியது, பிரமோத ஆண்டு, 1932
  4. தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962
  5. தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தி உரையும் பழைய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1964
  6. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
  7. தொல்காப்பியம் மூலம்
  8. தொல்காப்பியம் மூலம் பரணிடப்பட்டது 2011-07-24 at the வந்தவழி இயந்திரம்