தொக்லாய் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தொக்லாய் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம்
Tocklai Tea Research Institute
টোকলাই চাহ গৱেষণা প্ৰতিষ্ঠান
முந்தைய பெயர்
தொக்லாய் ஆய்வு நிலையம்
வகைதேயிலை ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1911 (113 ஆண்டுகளுக்கு முன்னர்) (1911)
பணிப்பாளர்ஏ. பாபு
அமைவிடம்
சதார், சின்னமாரா, ஜோர்ஹாட், இந்தியா
இணையதளம்www.tocklai.org

தொக்லாய் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் (Tocklai Tea Research Institute) என்பது தேயிலை மற்றும் அதன் விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் பழமையான தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். ஒரு நல்ல தேநீரின் அறிவியல் மற்றும் செயல்முறைகளை ஆராய, உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான தேயிலை ஆராய்ச்சி மையமாக இது 1911 இல் நிறுவப்பட்டது. இங்குள்ள ஆய்வகங்களில் தேயிலைத் தாவர நோய்களைத் தடுக்கவும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு ஒரு தேயிலை அருங்காட்சியகமும் மாதிரி தேயிலை தொழிற்சாலையும் நிறுவப்பட்டுள்ளன. தேயிலை இலைகளிலிருந்து தேநீர் தயாரிக்கும் செயல் முறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[1]

இந்நிறுவனம் ஜோர்ஹாட்டின் தென்கிழக்கு விளிம்பில் தொக்லாயில் அமைந்துள்ளது. இங்கு 1930ஆம் ஆண்டைய காலனித்துவ வீட்டில் பழங்கால குளிரூட்டப்பட்ட அறைகளுடன் கூடிய விருந்தினர் மாளிகையும் உள்ளது.

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்