தையூர் உத்தண்டன் கோவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தையூர் உத்தண்டன் கோவை [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய கோவை நூல். இதன் ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. உத்தண்டன் என்பவன் இந்த நூலாசிரியரை பேணிவந்த வள்ளல். நூல் இந்த வள்ளல்மீது பாடப்பட்டுள்ளது. நூல் அச்சாகவில்லை. சென்னையிலுள்ள அரசு ஆவணக் காப்பகத்தில் ஏட்டுச் சுவடியாக உள்ளது. நுல் 400 பாடல்களைக் கொண்டது என்றும், அவற்றில் 40 பாடலர்கள் இந்த ஏட்டில் இல்லை என்றும் அந்தச் சுவடியில் ஒரு குறிப்பு உள்ளது.

தொண்டை மண்டலக் குமுழி நாட்டைச் சேர்ந்த ஆமூர்க் கோட்டத்தில் உள்ள பாலாற்றங்கரையில் தைகைக் குன்றை அடுத்துள்ள இராசகேசரி நல்லூர் என்னும் மறுபெயரைப் கொண்டுள்ள தையூரில் களப்பாளர் என்ற காராளர் மரபில் பிறந்த 'குன்றன்' என்பவனின் மகன் இந்த உத்தண்டன்.

பாடல் - எடுத்துக்காட்டு

1

பொன் கோவை ஏந்தி உமை கோவை வந்து உதித்துப் பூத்த வல்லி
மின் கோவை வாழ்த்தி நல் வல்லமைக் கோவை வியந்து உரைத்த
ன் கோவை சேர் செங்கைத் தையார் உத்தண்டன் ந்தி குலத்தோன்
தன் கோவை சாற்றலுற்றேன் பலகாலும் தழைப்பதற்கே.

2

தேனிடு கூடும் கரும்பும் ஒத்து ஊதுவர் சேர வன்னம்
தாளிடு கூடம் களப்பாளன் உத்தண்டன் தைகையைச் சூழ்
மீனிடமோ ரத்னமீனிடமோ தெய்வ மீனிடமோ
மானிடமோ பெருமானிடமோ சிறு மானிடமோ.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 260. 
"https://tamilar.wiki/index.php?title=தையூர்_உத்தண்டன்_கோவை&oldid=16748" இருந்து மீள்விக்கப்பட்டது