தேவார உரை
Jump to navigation
Jump to search
கண்ணுடைய வள்ளல் திருஞான சம்பந்தர் தேவாரத்தில் பொருள் விளங்காத சித்திரக் கவி, ஏகபாதம், திருவெழுகூற்றிருக்கை [1] ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். இந்த உரைகள் இன்று பதிப்பில் இல்லை. எனினும் இந்த உரைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. [2] சுயம்பிரகாச யோகியார் என்பவர் 18 ஆம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தரின் சித்திரக்கவிக்கு உரை எழுதியுள்ளார். இந்த உரை கண்ணுடைய வள்ளல் எழுதிய உரையைப் பின்பற்றி எழுதப்பட்டதாக இருக்கலாம் என்பது மு. அருணாசலம் கருத்து.
அடிக்குறிப்பு
- ↑ ஏகபாதம், திருவெழுகூற்றிருக்கை ஆகிய இரண்டு பகுதிகளின் உரை பற்றிக் காழித் தாண்டவராயர் குறிப்பிட்டுள்ளார்.
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 128.
{{cite book}}
: Check date values in:|year=
(help)