தேடு
தேடு ( Thedu ) என்பது ஈஸ்வர் இயக்கத்தில் 2020இல் வெளியான தமிழ் மொழித் திரைப்படமாகும். இப்படத்தில் சந்தோஷ் சஞ்சய், மேகனா, சிவகாசி முருகேசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர்கள்
- சந்தோஷ் சஞ்சய்
- மேகனா
- சிவகாசி முருகேசன்
- காமராஜ்
- இராணி
தயாரிப்பு
இணைய தலைமுறை (2016) படத்திற்கு பிறகு இயக்குனர் ஈஸ்வர் இயக்கும் இரண்டாவது படம் இது. எதிமறை வேடங்களில் நடித்து வந்த சஞ்சய் இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். கடைசியாக உறுதிகொள் (2017) படத்தில் நடித்த மேகனா இவரது காதலியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய சிவகாசி முருகேசன் வில்லனாகவும் நடிக்கிறார்.[1][2]
விமர்சனம்
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றைக் கொடுத்து, " பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தகுந்த அம்சம் இல்லாததால், தேடு போன்ற படங்கள் ஏன் தயாரிக்கப்படுகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது".. இயற்கை விளக்குகளைப் பயன்படுத்தி "ஒளிப்பதிவு" செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தன்னிடம் உள்ள எளிய உபகரணங்களைப் பயன்படுத்தி வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளார். . . . மாலை மலரின் ஒரு விமர்சகர் படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை அளித்தார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "On travails of today's youngsters". Deccan Chronicle. 20 October 2019.
- ↑ Subramanian, Anupama (8 August 2019). "Movie with a message". Deccan Chronicle.
- ↑ "காதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்". 19 January 2020.