தெய்வச்சிலையார் விறலிவிடு தூது
தெய்வச்சிலையார் விறலிவிடு தூது என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'குமாரசாமி அவதானி' என்பவர் பாடிய தூது நூல். திருநெல்வேலி தெய்வச்சிலைப் பெருமாள் முதலியார் மீது பாடப்பட்டது. திருநெல்வேலிக்கு அருகே கிருஷ்ணாபுரம் என்னும் ஊர் உள்ளது. இந்த ஊர் அக் காலத்தில் மதுரையை ஆட்சிபுரிந்த கிருஷ்ணப்ப நாயக்கரால் அமைக்கப்பட்டது. இந்த ஊரிலுள்ள 'வெங்கடேசப் பெருமாள்' கோயிலில் திருபண்ணி செய்துவந்தவர் இந்த நூலாசிரியரான குமாரசாமி அவதானி. இவர் தன்னையும் கோயிலையும் பாதுகாத்துவந்த திருநெல்வேலிப் பெருமாள் முதலியாரைப் போற்றி இந்த நூலைப் பாடியுள்ளார்.[1]
நூலமைதி
நூலில் காப்பு வெண்பா ஒன்றும், 625 கண்ணிகளும் உள்ளன. கூளப்ப நாய்க்கன் விறலிவிடு தூது என்னும் நூலினைப் போன்ற அமைப்பினைக் கொண்டது. திருநெல்வேலி தெய்வச்சிலைப் பெருமாள் முதலியாரிடம் விறலி தூதாக அனுப்பப்படுவதாக நூல் அமைந்துள்ளது.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 233.
{{cite book}}
: Check date values in:|year=
(help)