தெகிடி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தெகடி
இயக்கம்ரமேசு
கதைரமேசு
இசைநிவாஸ் கே. பிரசன்னா
நடிப்புஅசோக் செல்வன்
ஜனனி ஐயர்
ஜெயப்பிரகாஷ்
ஒளிப்பதிவுதினேஷ் கிருஷ்ணா
கலையகம்திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
வெளியீடு2014
மொழிதமிழ்

தெகிடி 2014ல் வெளிவந்த திகில் திரைப்படமாகும். ரமேசு இதை இயக்கியுள்ளார்[1]. அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயப்பிரகாஷ், பிரதீப் நாயர், ஜெயக்குமார், ராஜன் ஐயர் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை நிவாஸ் கே. பிரசன்னா ஆவார்.

இயக்கம்

  • இந்தத் திரைப்படத்தின் இயக்குநர், பி. இரமேஷ் 2011ஆம் ஆண்டின் நாளைய இயக்குநர் - பருவம் 2 என்ற தொலைக்காட்சி மெய்ம்மை நிகழ்ச்சியில் முதலில் வந்தவர். ஒரு நாயின் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய இவரது குறும்படமான "பருதி-மாறன்" அப்போட்டியில் வென்றது.

கதை சுருக்கம்

அசோக் செல்வன் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஜனனி ஐயரைப் பற்றித் தகவல்களைத் திரட்டும்போது காதலில் விழுகிறார். ஜனனியிடம் தான் யார் என்ற உண்மையை சொல்ல நினைக்கும் வேளையில் அவர் முதலில் பின்தொடர்ந்து தகவல் திரட்டிய நபர்கள் எல்லாம் கொல்லப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

இதனால் தான் வேலை செய்யும் நிறுவனத்தின் மீது சந்தேகம் அடைகிறார். அடுத்துத் தான் பின் தொடர்ந்து வந்த ஜனனி உயிருக்கு ஆபத்து இருப்பது தெரியவர அவரைக் காப்பாற்ற நினைக்கிறார். இதற்கான காரணங்களையும் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்ற மர்மத்தையும் இத்திரைப்படத்தில் திகில் கதையாக இயக்குநர் சொல்லியுள்ளார்.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து அறிமுகமாகிறார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தெகிடி_(திரைப்படம்)&oldid=34286" இருந்து மீள்விக்கப்பட்டது