துன்னாலை
துன்னாலை | |
---|---|
ஆள்கூறுகள்: 9°47′0″N 80°14′0″E / 9.78333°N 80.23333°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ. பிரிவு | வடமராட்சி தென்மேற்கு |
துன்னாலை (Thunnalai) இலங்கையின் வடபகுதியில் யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறைக்கும் தொண்டைமானாறுக்கும் அருகாக அமைந்துள்ள சிறிய ஊர். இது வடமராட்சியில் கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமமாகும். இதன் அருகே நெல்லியடி, பருத்தித்துறை போன்ற நகரங்கள் காணப்படுகின்றன. இவ்வூர் துன்னையம்பதி எனவும் அழைக்கப்படும். இங்கே புகழ்பெற்ற ஆலயங்களான வல்லிபுர ஆழ்வார் கோவில், துன்னாலை கலிகைக் கந்தசுவாமி ஆலயம் என்பன அமைந்துள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, அம்பம் அரசினர் வைத்தியசாலைகள் என்பன இக்கிராமத்திற்கு அருகே அமைந்திருக்கின்றன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதற் கரும்புலியான கப்டன் மில்லர் பிறந்து வளர்ந்த ஊரும் இதுவாகும்.[1][2][3]
தமிழ் மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவர்கள் சைவ, கிறித்துவ சமயங்களை கடைபிடிக்கின்றனர். வேளாண்மை, மற்றும் வணிகம் என்பன இவர்களின் பிரதான தொழிலாகும். இங்கு பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ Schalk, Peter; Uppsala University. "The Vallipuram Buddha Image". Tamilnation.org. பார்க்கப்பட்ட நாள் 2013-01-10.
Vallipuram has very rich archaeological remains that point at an early settlement. It was probably an emporium in the first centuries AD. […] From already dated stones with which we compare this Vallipuram statue, we can conclude that it falls in the 3rd-4th century AD period. During that period, the typical Amaravati-Buddha sculpture was developed.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ worldhistory.org
- ↑ Culavamsa, Chapter LXXX, 54-58 பரணிடப்பட்டது 2006-09-27 at the வந்தவழி இயந்திரம்