திவ்வியசூரி சரிதம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திவ்வியசூரி சரிதம் [1] என்பது வைணவ குருபரம்பரை வரலாறுகளைக் கூறும் நூல்களில் ஒன்று. 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். [2] ஆழ்வார்களைத் திவ்விய சூரிகள் என்பது வைணவ மரபு. வங்கிபுரம் சீனிவாசாசாரியார் இந்த நூலை இயற்றியவர். ஆழ்வார்களின் வரலாற்றுடன் நாதமுனிகள், ஆளவந்தார், எம்பெருமானார், வேதாந்த தேசிகர் வரலாறுகளும் இதில் உள்ளன. இந்த நூல் 2824 பாடல்களைக் கொண்டது. [3] இந்த நூல் முழுமை பெறவில்லை எனத் தெரிகிறது.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 299. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. பதிப்பு 1939
"https://tamilar.wiki/index.php?title=திவ்வியசூரி_சரிதம்&oldid=17363" இருந்து மீள்விக்கப்பட்டது