திருவெண்காட்டுப் புராண சாரம்

திருவெண்காட்டுப் புராண சாரம் [1] என்னும் நூல் திருவெண்காட்டுப் புராணம் என்னும் நூலின் உச்சிக்கு ஏற உதவும் சாரம் [2] போல உருவாக்கப்பட்டுள்ள ஒரு நூல். புராண நூலும் சார நூலும் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. புராண நூல் சைவ எல்லப்ப நாவலரால் இயற்றப்பட்டது. இந்தச் சார நூலைச் செய்தவர் இந்த நூலில் அதிகம் ஈடுபாடு கொண்ட ஒரு புலவர். இவரது பெயர் தெரியவில்லை. இந்த நூலில் 20 விருத்தப் பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் 14 சீர் கொண்ட கழிநெடிலடி நான்கு கொண்டது.

பாடல் பகுதி - எடுத்துக்காட்டு

துவாபர யுகத்தில் சுவேதனாம் அரசன்

சூழ்வலம் பூதலம் வந்தான்
தோகையை இழந்தான் மரித்திடாது இருக்க
சோதியே இத்தலம் புகுந்தான் [3] [4] [5]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 158. 
  2. மாடிக்குச் சுவர் கட்டும் தொழிலாளர்கள் சாரத்தில் ஏறிப் பணி புரிவர். புராண நூலுக்கு இந்தச் சாரநால் வீடு கட்ட உதவும் சாரம் போலப் பயன்படும் நூல்
  3. இது ஒரு பாடலில் உள்ள ஓர் அடி
  4. பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  5. திருவான்மியூர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், சுவடி விளக்கம் தொகுதி 2, பக்கம் 170, ஆண்டு 1961