திருவிரிஞ்சைப் புராணம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருவிரிஞ்சைப் புராணம் [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புராணப் புலவர் சைவ எல்லப்ப நாவலரால் பாடப்பட்டது. வேலூர் மாவட்டத்திலுள்ள திரிவிரிஞ்சிபுரம் பற்றிய புராணச் செயுதிகளைக் கூறும் நூல்.

370 பாடல்களைக் கொண்ட இந்த நூலில்

பாயிரம்
நைமிசாரணியம்
கௌரிபுரி
விண்டுபுரி
விரிஞ்சபுரி
வழித்துணை [2]
பரலோகம்
பாலனுக்குத் திருமுடி வளைந்தது

என்னும் எட்டு சருக்கங்கள் உள்ளன.

பாடல் - எடுத்துக்காட்டு

அஞ்சுமுகி [3] நாலுமுகி [4] ஆறுமுகி [5] மாறா
மஞ்சுமுகி [6] நேர் எனும் வராகமுகி [7] வாளான்
நெஞ்சுமுகி [8] கார்முகி சிலீமுகியர் [9] ஆதி
விஞ்சுமுகில் நாண் ஒலி விளைத்து அமர் விளைத்தார். [10] [11]

இந்நூலுக்குக் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் உரை எழுதியுள்ளார். [12]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 165. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. இக்காலத்தில் இறைவன் பெயர் வழித்துணை நாதர் என வழங்கப்படுவது இதிலுள்ள புராணக் கதையின் அடிப்படையிலேயே
  3. மகேஸ்வரி
  4. அபிராமி
  5. கௌமாரி
  6. நாராயணி
  7. வராகி
  8. இந்திராணி
  9. வில்லும் அம்பும் உடையவள்
  10. இது ஒரு சந்தப் பாடல்
  11. பாடல் பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  12. பொழிப்புரை போலக் காணப்படும் இந்த உரை இதன் பழைய உரையைத் தழுவி எழுதப்பட்டு 1863-ல் அச்சிடப்பட்டுள்ளது
"https://tamilar.wiki/index.php?title=திருவிரிஞ்சைப்_புராணம்&oldid=17356" இருந்து மீள்விக்கப்பட்டது