திருவாய்மொழி வாசகமாலை
திருவாய்மொழி வாசகமாலை [1] நூலை இயற்றியவர் ஒரு வைணவப் பெண்மணி. இவரது பெயர் திருக்கோனேரி தாஸ்யை. காலம் 13 ஆம் நூற்றாண்டு. [2] திருவாய்மொழிப் பாடல்கள் சிலவற்றிற்கு எழுதப்பட்டுள்ள விவரண சதகம்.[3]
பொதுவாகச் சைவ, வைணவ மரபுகளில் சமய ஆசாரியருடைய நூல்களே செல்வாக்குப் பெறுவது வழக்கம். அல்லாதார் நூல்கள் மக்களிடம் அவ்வளவாகப் பரவுவது இல்லை. அவ்வாறு பரவாமல் போன நூல்களில் இதுவும் ஒன்று.
நம்மாழ்வார் திருவாய்மொழி 1102 பாடல்களைக் கொண்டது. அதில் 164 பாடல்கள் தெரிந்தெடுக்கப்பட்டு அவற்றிற்கான விரிவுரை கூறுவது இந்த நூல். திருவாய்மொழியில் 10 அல்லது 11 பாடல்களைக் கொண்ட பகுதி ஒரு பதிகம். 10 பதிகங்களைக் கொண்டது ஒரு 'பத்து'. இவ்வாறு 10 பத்துக்கள் சேர்ந்ததே திருவாய்மொழி. இவ்வாறு அமைந்துள்ள திருவாய்மொழி நூலிலிருந்து ஒவ்வொரு பதிகத்திலிருந்தும் முதல்-பாடல் அல்லது முதல்-இரண்டு-பாடல் விரிவுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட பாடல்களே 146. இந்தப் பாடல்களுக்கு விவரண சதகம் பாடும்போது அந்தந்த பதிகத்தில் அடங்கியுள்ள பாடல்கள் அனைத்துக்குமான தொகுப்புப் பொருளையும் இந்த நூல் குறிப்பிட்டு மணிப்பிரவாள நடையில் கூறுகிறது.[4]
அடிக்குறிப்பு
- ↑ தஞ்சை சரசிவதி மகால் 1952 வெளியீடு, நாவல்பாக்கம் தேவநாதாசாரியார் பதிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 262.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ விளக்கத் துணுக்குகள் (சதகம் = நூறு = துகள்கள்)
- ↑ http://www.tamilvu.org/courses/degree/a041/a0413/html/a0413443.htm