திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோயில்
தீர்த்தபாலீசுவரர் கோயில் (Triplicane Tirttapaleeswarar Temple) என்பது இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், திருவல்லிக்கேணி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். சப்த சிவத்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.[1]
தீர்த்தபாலீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி | |
---|---|
பெயர் | |
பெயர்: | தீர்த்தபாலீசுவரர் கோயில், திருவல்லிக்கேணி |
அமைவிடம் | |
ஊர்: | திருவல்லிக்கேணி |
மாவட்டம்: | சென்னை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | தீர்த்தபாலீசுவரர் |
தாயார்: | மகாதிரிபுரசுந்தரி |
தல விருட்சம்: | வன்னி மரம் |
தீர்த்தம்: | கடல் தீர்த்தம் |
வரலாறு | |
தொன்மை: | 500-1000 ஆண்டுகளுக்கு முன் |
சப்த சிவத்தலங்கள்
- மயிலாப்பூர் காரணீசுவரர் கோயில்
- தீர்த்தபாலீசுவரர் கோயில்
- மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோயில்
- மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோயில்
- மயிலாப்பூர் வாலீசுவரர் கோயில்
- மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில்
- மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
இந்த "சப்த சிவ ஸ்தலங்களுக்கு" கூடுதலாக, அருகாமையிலுள்ள ஏகாம்பரேசுவரர்-வள்ளுவர் கோவில் பாரம்பரியமாக எட்டாவது தவிர்க்க முடியாததாக கருதப்படுகிறது.[2]
சப்த சிவத்தலங்களை ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் தரிசிக்கலாம் என்பர். இவை ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்துள்ளன.[3] இவற்றைச் சப்த ரிசிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர், கௌதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர்.[4]
தல வரலாறு
இத்தலத்து மூலவரும், அம்பாளும் இரண்டடி உயரத்தில் மிகவும் சிறிய உருவமாக உள்ளனர். சுவாமி சற்றே இடப்புறம் சாய்ந்தபடி, தோற்றத்தில் ஒரு வெள்ளரிப்பழம் போல காட்சி தருகிறார்.
தீர்த்தவாரி திருவிழா
அகத்தியர் குள்ள முனிவர் என்பதால், அவர் தன்னை மலர்களால் பூஜை செய்யும் போது, தன் உயரத்தையும் குறைத்துக் கொண்டாராம் சிவன். அதன் காரணமாகவே அவர் உயரம் குறைவாக இருக்கிறார். இவருக்கு கடல் தீர்த்தத்தை கொண்டே பிரதான பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் மாசிமகத்தன்று நடைபெறுகின்ற தீர்த்தவாரி திருவிழாவின்போது சுவாமி கடலுக்கு சென்று நீராடிவிட்டு திரும்புகிறார்.
பிற தெய்வங்கள்
இக்கோயிலில் விநாயகர், முருகன் உடன் வள்ளி தெய்வானை, ஐயப்பன், தட்சணாமூர்த்தி, காலபைரவர், விஷ்ணு துர்க்கை, சரஸ்வதி, பிரம்மா, 63 நாயன்மார்கள் மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய சிற்பங்களும் உள்ளன.
முக்கியப் பண்டிகைகள்
இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம், போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திறந்திருக்கும் நேரம்
இக்கோயில் மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் உள்ளது. காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் இக்கோயில் திறந்திருக்கும்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 ஆரூர்.சுந்தரசேகர், பெருமைமிக்க மயிலாப்பூரில் சப்த சிவஸ்தலங்கள்!! விகடகவி, 16 மே 2020
- ↑ Muthukumaran, M. (6 November 2019). "மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் என்ன நடக்கிறது? - ஸ்பாட் விசிட் #Video". Vikatan.com. Vikatan. பார்க்கப்பட்ட நாள் 10 January 2023.
- ↑ தீபம் இதழ் - சப்த சிவ தலங்கள் - மே 20 2016 -பக்கம் 32
- ↑ தீபம் இதழ் மே 20 2016 -பக்கம் 42