திருவருட்பயன், நிரம்ப அழகிய தேசிகர் உரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருவருட்பயன், நிரம்ப அழகிய தேசிகர் உரை [1] நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. திருவருட்பயன் என்னும் நூலுக்கு எழுதப்பட்டுள்ள உரைநூல் இது. இந்த உரையை எழுதியவர் நிரம்ப அழகிய தேசிகர். உரை தொடங்கும்போது ஒரு காப்புச் செய்யுளுடன் தொடங்குகிறது.[2] அத்துடன் இவரே தன்னைப் பற்றியும், உரைநூலைப் பற்றியும் அறிமுகம் செய்துகொள்ளும் சிறப்புப் பாயிரப் பாடல் ஒன்றும் உள்ளது.[3]

இந்த உரையுடன் இந்த உரைநூலுக்குப் பின்னர் தோன்றிய 'வேலப்ப பண்டாரம் பதவுரையும் சிந்தனையுரையும்' என்னும் பகுதியும் சேர்த்து நூல் வெளியாகியுள்ளது. மற்றும் வெள்ளை வாரணர் விளக்கத்தோடு கூடிய பதிப்பும் வெளிவந்துள்ளது.[4]

உரை தரும் குறிப்புகள்

  • சிவபெருமானின் ஐந்தொழில்களைத் தமிழ்ச்சொறகளால் குறிப்பிடுகிறார் - படைப்பு, நிலை, ஈறு, மறைப்பு, அருள்
  • சங்கரன் வடமொழி விளக்கம் - சம் = சுகம், கரம் = பண்ணுவான். இரண்டும் புணர்ந்து சங்கரன் என நின்றது.
  • ஒருபொருட்கிளவி - பசு, உயிர், சேதனன், புற்கலன், சீவன், அணு, வியாபகன், ஆன்மா

திருவருட்பயன் குறள் வெண்பாவால் ஆன நூல். இந்தக் குறளால் இன்னது சொல்லப்பட்டது என்று ஒவ்வொரு குறளுக்கும் இந்த உரையானது விளக்கம் தருகிறது.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 62. 
  2. தேசத்து அடியார் நினைந்து உருகி நின்றிட்ட
    வாசத் தளை கடக்க மாட்டாது - பாசத்
    திருக்கோட்டு முக்கண் இவபெருமான் ஈன்ற
    ஒருகாட்டு நால்வாய் உவர்.

    (இந்த வெண்பா பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது)
  3. கொ. சண்முக முதலியார் பதிப்பு
  4. 1965 பதிப்பு