திருப்பூர் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருப்பூர்
இயக்கம்எம். சி. துரைசாமி
தயாரிப்புஆர். தர்மராஜ்
கதைஎம். சி. துரைசாமி
இசைசி. டி. சாஜு (பாடல்கள்)
எஸ். பி. வெங்கடேஷ் (பின்னணி இசை)
நடிப்பு
  • Prabha
  • Udhai
  • Unni Maya
ஒளிப்பதிவுஎஸ். பலராமன்
படத்தொகுப்புஎஸ். சத்திஷ்
கலையகம்பிரண்ட்ஸ் புரொடக்சன்
வெளியீடுசெப்டம்பர் 10, 2010 (2010-09-10)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருப்பூர் (Tiruppur) என்பது 2010ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் அதிரடி திரைப்படம் ஆகும். எம். சி. துரைசாமி இயக்கிய இப்படத்தில் பிரபா, உதய், புதுமுகம் உன்னி மாயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சர்வமதி, பத்மகுமார், தண்டபாணி, மகாநதி சங்கர், திருப்பூர் செல்வராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஆர். தர்மராஜ் தயாரித்த இப்படம் சி. டி. சாஹு இசை அமைத்துள்ளார். படமாது 10 செப்டம்பர் 2010 அன்று வெளியிடப்பட்டது.[1]

கதை

சிறைத் தண்டனை அனுபவித்து, பழனிக்கு தொடருந்தில் திரும்பிக்கொண்டிருக்கும் கேசவனுடன் (உதாய்) படம் தொடங்குகிறது. அவன் தன் கடந்த காலத்தை நினைக்கிறான்.

ஆதி (பிரபா), கேசவன், பெருமாள் (சர்வமதி) மற்றும் சீனு (பத்மகுமார்) ஆகியோர் பழனியில் வசிக்கும் நெருங்கிய நண்பர்கள். ஆதி தனது விதவை தாயுடன் வசித்து வந்தபடி ஒரு சிறிய பட்டறையில் பணிபுரிந்தான். கேசவன் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் வேலையில்லாதவன். ஒரு நாள், கேசவன் மருத்துவமனையில் அபரஞ்சியை (உன்னி மாயா) வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்று திட்டினான். ஆனால் பின்னர், அவளை அவமதித்ததற்காக அவன் வருந்தி மன்னிப்பு கேட்க விரும்பினான். அதன்பிறகு, பழனியில் கல்வி பயணத்தில் இருந்த அபரஞ்சி ஒரு மருத்துவ மாணவி என்பதை அறிந்து கொண்டான். இறுதியில் அவர்கள் நட்பு கொள்கிறார்கள். பின்னர் அபரஞ்சி மற்றும் அவரது கல்லூரி தோழிகளை கேசவன் தனது வீட்டில் தங்க வைக்கிறான். கேசவன் அபரஞ்சியிடம் தனது காதலைச் சொல்ல பயந்தான். ஆனால் அபரஞ்சி கடைசியில் அதைப் பற்றி அறிந்தாள், அவள் தன் சொந்த ஊரான திருப்பூருக்குச் செல்வதற்கு முன்பு அவனுக்கு ஒரு காதல் கடிதம் கொடுத்தாள்.

நான்கு நண்பர்களும் பொள்ளாச்சியில் அவர்களது நண்ரின் திருமணத்தில் கலந்துகொள்ள வருகின்றனர். கேசவன் விழாவுக்கு முன் அபரஞ்சியை சந்தித்திக்கிறான். ஒரு நகைக் கடையில், கேசவன் தனது காதலிக்காக தனது நண்பன் ஆதியுடன் வளையல்களை வாங்கினான். ஒரு காவல் ஆய்வாளர் ( மகாநதி சங்கர் ) தனது மனைவியின் வளையல்களைத் திருடியதாக சந்தேகிக்கிறார். அப்போது காவல் ஆய்வாளர் ஆதியை அடிக்கிறார். அபரஞ்சியின் தந்தை சுப்பிரமணி ( தண்டபாணி ) இதைப் பார்த்ததால் நிலைமை மோசமடைகிறது. திருமண விழாவில், கேசவன் அபரஞ்சிக்கு வளையல்களை பரிசளிக்கிறான். அதைப் பார்த்த சுப்பிரமணி அவனை அவமதித்து கேசவனை தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருமாறு சவால் விடுக்கிறார்.

கேசவன் அபரஞ்சியை திருப்பூரிலேயே திருமணம் செய்து கொள்வான் என்று ஆதி சுப்ரமணியிடம் சவால் விடுகிறான். ஆனால் தீர்த்தகிரி (திருப்பூர் செல்வராஜ்) தலையிட்டதால் அவர்களின் முதல் முயற்சி தோல்வியடைகிறது. பின்னர், சுப்ரமணி நான்கு இதுபற்றி நண்பர்களுக்கு விளக்கினான். குண்டர் தலைவன் தீர்த்தகிரி சுப்பிரமணியிடம் அவரது மகளை தனது தம்பிக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் அதற்கு சுப்பிரமணி மறுத்துவிடுகிறார். கேசவன் அபரஞ்சியை திருமணம் செய்து தீர்த்தகிரியிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று சுப்பிரமணி விரும்புகிறார். அதன்பிறகு, நான்கு நண்பர்களையும், அபரஞ்சியையும் பழிவாங்கும் எண்ணம் கொண்ட காவல் ஆய்வாளர் கைது செய்து, அவர்களை தீர்த்தகிரியின் தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றார். அந்த ஐந்து பேரும் தீர்த்தகிரியின் அடியாட்களிடமிருந்து தப்பிக்கின்றனர். தீர்த்தகிரியின் அடியாட்களைத் தோற்கடித்த நண்பர்கள் ஒன்று கூடி, தீர்த்தகிரியுடன் கடுமையாக சண்டை போடுகிறார்கள். தீர்த்தகிரி கேசவனை கொல்ல முயன்றபோது, ஆதி தன் உயிரைக் கொடுத்தவனைக் காக்கிறான். பின்னர் கேசவன் தீர்த்தகிரியைக் கொல்கிறான்.

தற்போது கேசவன் பழனிக்கு வந்து தனது காதலி அபரஞ்சியையும் தனது இரண்டு நண்பர்களையும் சந்திக்கிறான்.

நடிகர்கள்

  • பிரபா ஆதியாக
  • உதய் கேசவனாக
  • உன்னி மாயா அபரஞ்சியாக
  • சர்வமதி பெருமாளாக
  • பத்மகுமார் சீனுவாக
  • தண்டபாணி (நடிகர்) சுப்பிரமணியாக
  • மகாநதி சங்கர் காவல் ஆய்வாளராக
  • திருப்பூர் செல்வராஜ் தீர்த்தகிரியாக
  • சிறீதர்
  • இராஜகுரு
  • எஸ். எம். சண்முகம்
  • உசா எலிசபெத் அபரஞ்சியின் தாயாக
  • ஜானகி
  • அர்சனா அரிஷ் கவிதாவாக
  • கோவை தேசிங்கு தீர்த்தகிரியின் அடியாளாக
  • இராமமூர்த்தி
  • நாக்அவுட் நந்தா
  • சின்னராசு குருக்களாக

தயாரிப்பு

எம். சி. துரைசாமி, ஃபிரெண்ட்ஸ் புரொடக்சன் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட திருப்பூர் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். கணபதி வந்தாச்சி (2006) படத்தில் அறிமுகமான உதய், பிறப்பு (2007), தோழி (2009) ஆகிய படங்களில் நடித்த பிரபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். கதாநாயகியாக நடிக்க கேரளத்தைச் சேர்ந்த உன்னி மாயா தேர்வு செய்யப்பட்டார். இப்படமானது முக்கியமாக திருப்பூரில் படமாக்கப்பட்டது. மேலும் இரண்டு பாடல்கள் அந்தமான் தீவுகளில் படமாக்கபட்டன.[2][3][4][5][6][7]

இசை

படத்திற்கான இசையை திரைப்பட இசையமைப்பாளர் சி. டி. ஷாஜு அமைத்தார். படத்தின் இசைப்பதிவில் பழனி பாரதி, எம். சி துரைசாமி எழுதிய பாடல் வரிகளுடன்கூடிய ஐந்து பாடல்கள் உள்ளன.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "வீசும் காற்று"    4:54
2. "காதல் பைத்தியம்"    5:33
3. "எந்த துணியிலும்"    4:54
4. "தங்க தங்க"    3:52
5. "ஹே அடாவடி"    4:10
மொத்த நீளம்:
23:23

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திருப்பூர்_(திரைப்படம்)&oldid=34121" இருந்து மீள்விக்கப்பட்டது