திருப்புகலூர் அந்தாதி
Jump to navigation
Jump to search
திருப்புகலூர் அந்தாதி [1] 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். இதனை இயற்றியவர் நெற்குன்றவாணர்.
இரண்டு பாயிரப் பாடல்களும், கட்டளைக் கலித்துறையாலான நூறு அந்தாதிப் பாடல்களும் இதில் உள்ளன. பதினோராம் திருமுறையில் காணப்படும் அந்தாதிப் பாடல்களுக்குப் பின்னர் தோன்றிய அந்தாதிச் சிற்றிலக்கியம் இது.
பாடல் - எடுத்துக்காட்டு
பொற்குன்று அனைய முலை உமை பங்கர்க்குப் புண்ணியற்குச்
சிற்குன்று அனைய திருப்புகலூரற்குச் செந்தமுழால்
நெற்குன்றவாணன் உரைத்த அந்தாதியை நீள் நிலத்தில்
கற்கின்றது அன்றிக் கவி பாட யாவர்க்கும் கற்பு அல்லவே.[2] [3]
இந்த நூல் 1875-ல் முதலில் வெளிவந்த பின்னர் பல முறை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 254.
- ↑ நூலின் சிறப்புப் பாயிரப் பாடல்
- ↑ கட்டளைக் கலித்துறைப் பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது