திருக்கை வழக்கம்
Jump to navigation
Jump to search
திருக்கை வழக்கம் என்னும் நூல் 85 கண்ணிகள் கொண்ட கலிவெண்பா என்னும் பா-வகையால் இயற்றப்பட்ட நூல். கம்பர் பாடியதாகக் கூறப்படும் “ஏர் எழுபது” நூலைப் பற்றிக் குறிப்பிடும் இந்த நூலைப் பாடியவர் இன்னார் என்று தெரியவில்லை. ஏர் பிடித்தவர் ஏற்றம் – என்னும் பெயரில் கம்பநாடரின் ஏர் எழுபதும் புலியூர்க் கேசிகன் உரையும் என்னும் குறிப்போடு இந்த நூல் வெளிவந்துள்ளது. [1]
தொண்டரில் சிறந்தோர் திருத்தொண்டர் 63 நாயன்மார்கள். இவர்களின் வரலாற்றைக் கூறும் நூல் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம். கை என்னும் சொல் ஒழுக்கத்தைக் குறிக்கும். திருக்கை என்பது சிறந்த ஒழுக்கம். சிவனடியாரின் சிறந்த ஒழுக்கத்தை இந்த நூல் போற்றிப் புகழ்கிறது. எனவே இந்த நூலின் பெயர் திருக்கை வழக்கம் எனச் சூட்டப்பட்டுள்ளது.
மேற்கோள் குறிப்பு
- ↑ தேனருவிப் பதிப்பகம், தியாகராய நகரம், சென்னை 17 – வெளியீடு, நவம்பர் 1957