திரிகடுகம் பழைய உரை
Jump to navigation
Jump to search
பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]
திரிகடுகம் நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. உரை ஆசிரியர் பெயர் தெரியவில்லை.[2]
இந்த உரை தெளிவும் திருத்தமும் கொண்ட பொழிப்புரையாக உள்ளது. உரையாசிரியரின் சமயப் புலமையை விளக்குவதாக இவ்வுரை அமைந்துள்ளது. மூலப்பாடல்களுக்குச் சிறந்த பாடம் எது என உணரத்தக்க வகையில் உள்ளது.
இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005