தினேஷ் கோபாலசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தினேஷ் கோபாலசாமி
பிறப்பு29 ஆகத்து 1985 (1985-08-29) (அகவை 39)
சென்னை, தமிழ்நாடு
மற்ற பெயர்கள்தினேஷ்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ரச்சித்தா மகாலட்சுமி(தற்போது வரை)
உறவினர்கள்கோபாலசாமி (தந்தை)
அம்சவேனி (தாய்)

தினேஷ் கோபாலசாமி (தினேஷ் கோபால்சாமி) என்பவர் ஒரு இந்திய தமிழ் நடிகர் ஆவார். இவர் திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படத்தில் அறிமுகமானார்.[1] 2010 இல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகான் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார். இப்போது பூவே பூச்சுடவா மற்றும் நாச்சியார்புரம் தொலைக்காட்சி தொடரில் நடிக்கின்றார்.[2][3]

வாழ்க்கை

தினேஷ் கோபால்சாமி ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவர் 2014 திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் 2011-இல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொலைக்காட்சி தொடரில் இணைந்து நடித்த நடிகை ரச்சித்தா மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தினேஷ், 2016 இல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr & Mrs கில்லாடிஸ்யில் ரச்சித்தா மகாலட்சுமி உடன் பங்கேற்பாளராக கலந்து கொண்டார். இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்.[4]

தொலைக்காட்சி தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2010 மகான் ஸ்ரீ ராகவேந்திரா விஜய் தொலைக்காட்சி
2011 பிரிவோம் சந்திப்போம் கார்த்திக் விஜய் தொலைக்காட்சி
2013 புதுக்கவிதை தனுஷ் விஜய் தொலைக்காட்சி
2017 பூவே பூச்சுடவா சிவா ஜீ தமிழ் தொலைக்காட்சி
2019 நாச்சியார்புரம் கார்த்திக் ஜீ தமிழ் தொலைக்காட்சி

திரைப்படம்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
2014 திருமணம் எனும் நிக்காஹ் அசரஃப்

மேற்கோள்கள்

  1. https://timesofindia.indiatimes.com/topic/Dinesh-Gopalsamy%7Cwork=The Times of India
  2. "Real life couple Rachita-Dinesh pair up for Zee Tamil's 'Nachiyarpuram'". zeenews.india.com.
  3. "`` `எப்படி கலர் ஆனீங்க'னு எல்லாரும் கேட்கிறாங்க..! - ரச்சிதா". cinema.vikatan.com.
  4. "பூவே பூச்சூடவா - புத்தம் புதிய தொடர்". cinema.dinamalar.com.
"https://tamilar.wiki/index.php?title=தினேஷ்_கோபாலசாமி&oldid=21869" இருந்து மீள்விக்கப்பட்டது