தாமஸ் மோர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பெரு மதிப்பிற்குறிய
சர் தாமஸ் மோர்
படிமம்:Hans Holbein, the Younger - Sir Thomas More - Google Art Project.jpg
உயராட்சித் தலைவர்
பதவியில்
அக்டோபர் 1529 – மே 1532
ஆட்சியாளர்இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி
முன்னையவர்தாமஸ் வோல்சி
பின்னவர்தாமஸ் ஆடிலி
லேன்காஸ்டர் மாவட்ட ஆளுநர்
பதவியில்
31 டிசம்பர் 1525 – 3 நவம்பர் 1529
ஆட்சியாளர்எட்டாம் ஹென்றி
முன்னையவர்இரிச்சர்டு விங்ஃபீர்ட்
பின்னவர்வில்லியம் ஃபிட்சுவில்லியம்
இங்கிலாந்து பேரரசின் கீழவையின் அவைத்தலைவர்
பதவியில்
16 ஏப்ரல் 1523 – 13 ஆகஸ்ட் 1523
ஆட்சியாளர்இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி
முன்னையவர்தாமஸ் நிவேலி
பின்னவர்தாமஸ் ஆடிலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 பெப்ரவரி 1478
இலண்டன் நகரம், இலண்டன், இங்கிலாந்து இராச்சியம்
இறப்பு6 July 1535(1535-07-06) (aged 57)
Tower Hill,
Liberties of the Tower of London, Tower Hamlets
இங்கிலாந்து இராச்சியம்
இளைப்பாறுமிடம்புனித பேதுரு ஆலயம், இலண்டன் கோபுரம், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
51°30′31″N 0°04′37″W / 51.508611°N 0.076944°W / 51.508611; -0.076944
துணைவர்(கள்)
ஜேன் கிலோட் (தி. 1505)

ஆலிஸ் மிடில்டன் (தி. 1511)
பிள்ளைகள்மார்க்ரெட்
எலிசபெத்
சிசிலி
ஜான்
முன்னாள் மாணவர்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
சமயம்கத்தோலிக்க திருச்சபை
கையெழுத்துபடிமம்:Thomas More Signature.svg

சர் தாமஸ் மோர் (/ˈmɔːr/; 7 பெப்ரவரி 1478 – 6 ஜூலை 1535), அல்லது கத்தோலிக்கர்களால் புனித தாமஸ் மோர்,[1][2] என்று அழைக்கப்படுபவர் ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரும், தத்துவவியலாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். ஐரோப்பிய மறுமலர்ச்சியில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தவர். இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் முக்கிய ஆலோசகராக இருந்த இவர் அக்டோபர் 1529 முதல் 16 மே 1532 வரை இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராகப் பணியாற்றினார்.[3] மார்ட்டின் லூதர் மற்றும் வில்லியம் டின்டேல் முதலியோரால் கொணரப்பட்ட கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தினை இவர் வன்மையாக எதிர்த்தார். அரசியல் சமுதாய முறைகளில் இலக்கியல் வாழ்வுடை கற்பனைத் தீவு பற்றி ஒரு நூலினை 1516ஆம் ஆண்டு Utopia என்னும் பெயரில் வெளியிட்டார்.

பின்னாட்களில் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து இங்கிலாந்து அரசர் பிரிந்ததும் அவரை இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக ஏற்க மறுத்தார். திருச்சபையின் தலைவர் பதவி திருத்தந்தைக்கே உரியது எனவும் திருத்தந்தையின் அனுமதியில்லாமல் ஆன் பொலினை அரசர் மணப்பது தவறு அன்றும் இவர் கூறினார். இதனால் இவர் அரசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தலை வெட்டிக்கொல்லப்பட்டார்

திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் இவரை ஒரு மறைசாட்சி என 1935இல் புனிதர் பட்டம் அளித்தார்; திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 2000இல் இவரை அரசியல்வாதிகளுக்கும், அரசுத்தலைவர்களுக்கும் பாதுகாவலராக அறிவித்தார்.[4] 1980 முதல், இங்கிலாந்து திருச்சபை இவரை மறைசாட்சியாக வணங்குகின்றது.[5] 2002இல் பிபிசி நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் 100 பெரிய பிரித்தானியர்கள் (100 Greatest Britons) பட்டியலில் 37ஆம் இடத்தைப்பெற்றார்.[6]

மேற்கோள்கள்

  1. St. Thomas More, 1478–1535 at Savior.org
  2. Homily at the Canonization of St. Thomas More பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் at The Center for Thomas More Studies at the University of Dallas, 2010, citing text "Recorded in The Tablet, ஜூன் 1, 1935, pp. 694–695"
  3. Linder, Douglas O. The Trial of Sir Thomas More: A Chronology at University Of Missouri-Kansas City (UMKC) School Of Law
  4. Apostolic letter issued motu proprio proclaiming Saint Thomas More Patron of Statesmen and Politicians, 31 October 2000 Vatican.va
  5. "Holy Days". Worship – The Calendar. இங்கிலாந்து திருச்சபை. 2011. Archived from the original on 2018-12-25. Retrieved 20 ஏப்ரல் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. Sue Parrill, William Baxter Robison (2013). "The Tudors on Film and Television", p. 92. McFarland,
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


அரசியல் பதவிகள்
முன்னர்
தாமஸ் நிவேலி
இங்கிலாந்து கீழவையின் அவைத்தலைவர்
Speaker of the House of Commons

1523
பின்னர்
தாமஸ் ஆடிலி
முன்னர்
இரிச்சர்டு விங்ஃபீர்ட்
லேன்காஸ்டர் மாவட்ட ஆளுநர்
Chancellor of the Duchy of Lancaster

1525–1529
பின்னர்
வில்லியம் ஃபிட்சுவில்லியம்
முன்னர் உயராட்சித் தலைவர்
1529–1532
பின்னர்
தாமஸ் ஆடிலி
"https://tamilar.wiki/w/index.php?title=தாமஸ்_மோர்&oldid=393371" இலிருந்து மீள்விக்கப்பட்டது