தாமரைக்கண்ணன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
தாமரைக்கண்ணன் |
---|---|
பிறப்புபெயர் | வீ. இராசமாணிக்கம் |
பிறந்ததிகதி | சூலை 2, 1934 |
பிறந்தஇடம் | ஆட்சிப்பாக்கம், திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. |
இறப்பு | சனவரி 19, 2011 | (அகவை 76)
பணி | தமிழாசிரியர் |
தேசியம் | இந்தியன் |
கல்வி | முதுகலைத் தமிழ், முதுநிலை கல்வியியல் |
பணியகம் | தமிழ்நாடு அரசு |
அறியப்படுவது | எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது, நல்லாசிரியர் விருது. |
பெற்றோர் | மா.வீராசாமி, பாஞ்சாலி |
துணைவர் | எம்.பத்மாவதி |
பிள்ளைகள் | மகன்- 4 மகள் - 1 |
இணையதளம் | thamaraikannan |
தாமரைக்கண்ணன் (Thamarai Kannan) என அறியப்படும் வீ. இராசமாணிக்கம் (சூலை 2, 1934 - சனவரி 19, 2011) ஒரு தமிழக எழுத்தாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், நூல் மதிப்புரையாளர், பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரும் ஆவார்[1].இவர் எழில், அன்பெழிலன், கண்ணன், யாரோ, அம்சா, ஜனநாதன், பாஞ்சாலி மகன், அச்சிறுபாக்கத்தார், அகரத்தான் போன்ற புனைப் பெயர்களிலும் எழுதி வந்தார்.
வாழ்க்கைச் சுருக்கம்
தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஆட்சிப்பாக்கம் எனும் சிற்றூரில் வீராச்சாமி மற்றும் பாஞ்சாலி ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தாமரைக்கண்ணன் உயர்நிலைப்பள்ளிக்கல்வியை சென்னையிலும் ஆசிரியர் பயிற்சிக்கல்வியைத் திருவள்ளூரிலும் பயின்றார். 1980 இல் சென்னைப் பல்கலைக்கழகத்திலும், 1983 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார்., 1984 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை (தமிழ்) தேர்வும், 1990 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.எட். தேர்வுகள் எழுதி பட்டங்கள் பெற்றார். மேலும் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1965 முதல் 1991 வரை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
எழுத்துப்பணி
சிறுகதை, நாவல், நாடகம், வரலாறு, கல்வெட்டு ஆய்வு, குழந்தை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 52 நூல்கள் எழுதியுள்ளார்.[2]
நூல் பட்டியல்
இவர் எழுதிய நூல்களில் சில
புதினங்கள்
வ.எண் | நூலின்பெயர் | வெளியான ஆண்டு | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | தங்கத்தாமரை | ஆகஸ்டு 1962 | வள்ளுவர் பண்ணை | |
2 | மூன்றாவதுதுருவம் | நவம்பர் 1970 | ஸ்டார் பிரசுரம் | |
3 | நெஞ்சின் ஆழம் | மார்ச் 1979 | மருதமலையான் | |
4 | அவள்காத்திருக்கிறாள் | டிசம்பர் 1982 | பூவழகிப் பதிப்பகம் | கன்னடமொழியில் மொழிப் பெயர்க்கப்பட்டது |
5 | பன்னீர்சிந்தும்பனிமலர் | அக்டோபர் 1983 | நறுமலர்ப் பதிப்பகம் | |
6 | நெஞ்சத்தில் நீ | டிசம்பர் 1987 | பராசக்திபதிப்பகம் |
சிறுகதைத் தொகுதிகள்
வ.எண் | நூலின்பெயர் | வெளியான ஆண்டு | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | மனக்காற்றாடி | நவம்பர் 1964 | அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் | |
2 | கொன்றைப்பூ | ஜூன் 1972 | பாப்பா பதிப்பகம் | 'அத்திப்பூ' என்னும் நாடகம் 11 - ஆம் வகுப்பு துணைப்பாடநூலில் இடம் பெற்றது (1978) |
3 | அறுசுவை | ஆகஸ்டு 1979 | சேகர் பதிப்பகம் | |
4 | ஏழுநாள் | ஆகஸ்டு 1978 | சேகர் பதிப்பகம் | |
5 | எல்லாம்இன்பமயம் | டிசம்பர் 1984 | பராசக்திபதிப்பகம் | |
6 | உயர்ந்தஉள்ளம் | டிசம்பர் 1984 | பராசக்திபதிப்பகம் | |
7 | கனவுக்கண்கள் | டிசம்பர் 1985 | பராசக்திபதிப்பகம் | |
8 | நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் | டிசம்பர் 1985 | பராசக்திபதிப்பகம் |
நாடகங்கள்
வ.எண் | நூலின்பெயர் | வெளியான ஆண்டு | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | கிள்ளிவளவன் | 1960 | அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் | ‘கொடைவள்ளல் குமணன்’ என்னும் நாடகம் 12 - ஆம் வகுப்பு சிறப்புத் தமிழில் இடம் பெற்றது |
2 | வெண்ணிலா | ஜனவரி 1963 | அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் | |
3 | மருதுபாண்டியர் | பிப்ரவரி 1963 | அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் | |
4 | அலெக்ஸாண்டர் | ஏப்ரல் 1963 | அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் | |
5 | கைவிளக்கு | நவம்பர் 1979 | இலக்குமி நிலையம் | |
6 | சங்கமித்திரை | ஆகஸ்டு 1982 | விசாலாட்சி பதிப்பகம் | தமிழகஅரசின்பரிசுபெற்றது (1982) |
7 | பேசும்ஊமைகள் | டிசம்பர் 1984 | மணியம் பதிப்பகம் | |
8 | நல்லநாள் | டிசம்பர் 1984 | பராசக்திபதிப்பகம் | |
9 | நல்லூர் முல்லை | டிசம்பர் 1985 | பராசக்திபதிப்பகம் | கன்னடம், இந்தி, தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது |
10 | வளையாபதி | டிசம்பர் 1985 | பராசக்திபதிப்பகம் | |
11 | பள்ளிக்கூடம் | ஏப்ரல் 1989 | திருமேனி நிலையம் | |
12 | இரகசியம் | நவம்பர் 1991 | பராசக்திபதிப்பகம் | |
13 | சாணக்கியன் | டிசம்பர் 1992 | திருமேனி நிலையம் |
வரலாற்று நூல்கள்
வ.எண் | நூலின்பெயர் | வெளியான ஆண்டு | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | கருணைக்கடல் | ஜூலை 1963 | சுகுணா பப்ளிஷர்ஸ் | |
2 | திருநாவுக்கரசர் | ஜனவரி 1964 | அசோசியேஷன் பப்ளிஷிங் ஹவுஸ் | |
3 | ஒருமனிதன்தெய்வமாகிறான் | டிசம்பர் 1984 | பராசக்தி பதிப்பகம் | |
4 | கருமாரிப்பட்டிசுவாமி | ஜனவரி 1987 | ராதா ஆப்செட் பிரஸ் | |
5 | சம்புவரையர் | 1989 | பராசக்தி பதிப்பகம் |
ஆய்வு நூல்கள்
வ.எண் | நூலின்பெயர் | வெளியான ஆண்டு | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | ஆட்சீசுவரர்திருக்கோயில் | ஏப்ரல் 1975 | விழாக்குழு | |
2 | வரலாற்றுக்கருவூலம் | டிசம்பர் 1984 | சேகர் பதிப்பகம் | தமிழகஅரசின்பரிசுபெற்றது (1985) |
3 | வரலாறுகூறும்திருத்தலங்கள் | ஏப்ரல் 2006 | மூவேந்தர் பதிப்பகம் |
அறிவியல்நூல்
வ.எண் | நூலின்பெயர் | வெளியான ஆண்டு | பதிப்பகம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1 | வியப்பூட்டும் விண்வெளி் | மார்ச் 1992 | திருமேனி நிலையம் |
விருதுகளும், பட்டங்களும்
- சங்கமித்திரை -நாடகம் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1982
- வரலாற்றுக் கருவூலம் - தொல்பொருளியல் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1984 (இரண்டாம் பரிசு) [3]
- பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய ‘இரகசியம்’ நாடகத்திற்கான முதல் பரிசு (1993)
- தமிழக அரசு வழங்கிய மாநில நல்லாசிரியர் விருது (1988)
- பல்கலைச் செம்மல் - சென்னை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் (1985)
- டாக்டர் பட்டம் - நியூயார்க் உலகப்பல்கலைக்கழகம் (1985)
- திருக்குறள் நெறித் தோன்றல் - தமிழக அரசு (1985)
- நாடக மாமணி - திண்டிவனம் தமிழ் இலக்கியப் பேரவை (1985)
- பாரதி தமிழ்ப்பணிச் செல்வர் - ஸ்ரீராம் நிறுவனம் (1990)
- இலக்கியச் சித்தர் - பண்ருட்டி எழுத்தாளர் சங்கம் (1995)
- இலக்கியச் சிற்பி - புதுவை (1996)
தொல்பொருள் ஆய்வுத்துறையில் புதியகண்டுபிடிப்புகள்
- 30/07/1976 - ஒரத்தியில் நந்திவர்மன், கன்னரதேவன் (கன்னட) கல்வெட்டுகள்.... அனந்தமங்கலம் சமணர் கல்வெட்டு. ‘தினமணி’
- 05/12/1976 - அச்சிறுபாக்கம்... பார்வதிசிலை.
- -/-/1977 - விஜயநகரகாலச்செப்பேடு...
- 13/11/1977 - நடுகல் கண்ட கீழ்ச்சேரிக் கோழி. 'தினமணி சுடர்’
- 03/09/1978 - மதுராந்தகம் வட்டம் ஈசூரில் சோழர்காலப் பஞ்சலோகப்படிமங்கள் (வீணாதர்... பார்வதி) கண்டறிந்து தொல்பொருள்துறைக்குச் செய்தி தந்தது. ‘தினமணி சுடர்’
- -/-/1978 - மதுராந்தகம் வட்டம், இடைகழிநாடு, கருவம்பாக்கத்தில் வீரகேரளன் காசுகண்டு தொல்பொருள்துறைக்கு அளித்தது.
- 02/03/1979 - வள்ளுவர் காலத்தில் எழுதிய தமிழ் மற்றும் திருக்குறள். ‘தினமணி கதிர்’
- 24/05/1981 - தெள்ளாற்றில் 27 புதியகல்வெட்டுகள் படியெடுப்பு.
- 03/01/1982 - தெள்ளாறு... ஜேக்ஷ்டாதேவி அரியசிலை கண்டுபிடிப்பு. ‘தினமணி சுடர்’
- 27/03/1982 - திண்டிவனம் அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு. ‘தினமணி’
- 08/05/1982 - 1000 வயதான அபூர்வ நடுகல். ‘தினமலர்’
- 05/05/1983 - திண்டிவனம் வட்டம், கீழ்ச்சேவூர் 20 புதிய கல்வெட்டுகள் படியெடுப்பு.
- 06/05/1983 - இரண்டு தெலுங்கு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.
- 05/10/1984 - தெள்ளாறு... கன்னரதேவன் கல்வெட்டு.
- 10/12/1984 - செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், கொடூரில் 8 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.
- 31/08/1985 - ஒரத்தி 6 புதிய கல்வெட்டுகள் படியெடுப்பு.
- 14/01/1986 - விழுப்புரம் 20 புதிய கல்வெட்டுகள் படியெடுப்பு. ‘தினமணி’
- 16/05/1987 - தென்ஆர்க்காடு மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், சிறுவந்தூரில் 3 கல்வெட்டுகள்.
- 08/08/1987 - பண்ருட்டி அருகே பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு. ‘தினமலர்’
- 21/11/1987 - தென்ஆர்க்காடு மாவட்டம், வானூர் வட்டம், தென்சிறுவள்ளூரில் பராந்தகன், முதலாம் இராசராசன், கோப்பெருஞ்சிங்கன் காலக்கல்வெட்டுகள் கண்டுபிடிப்பும் படியெடுப்பும்.
- 28/12/1987 - செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர்வட்டம், புத்திரன்கோட்டையில் 28 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பும் படியெடுப்பும். ‘தினமணி’
- 08/05/1989 - கற்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு. ‘தினமணி’
- 31/05/1989 - 3000 ஆண்டுகளுக்கு முந்திய குகை சித்திரங்கள் கண்டுபிடிப்பு. ‘தேவி’
- 19/01/1990 - மதுராந்தகம் வட்டம், கடைமலைப்புத்தூரில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய 1.5 மீட்டர் உயரமுள்ள இயக்கி, சாத்தனார் சிலைகள். மின்னல்சித்தாமூரில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால சாத்தனார், கொற்றவை சிலைகள் கண்டறிந்தது. ‘தினமணி’
- 05/07/1997 - 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட அய்யனார் சிலை. ‘தினமணி’
- 26/08/1997 - பொலம்பாக்கத்தில் புதிய கல்வெட்டுகள். ‘தினமலர்’
- 02/09/1997 - காசி பயண கோட்டுருவச் சிற்பம். ‘தினமணி’
- 20.04.1998 - செய்யாறு வட்டம், கூழம்பந்தல் 1500 ஆண்டுகளுக்கு முன்னதான ஒரு மீட்டர் உயரத்திற்கும் மேலுள்ள சமணதீர்த்தங்கரர் சிலை.
- 22/04/1998 - செய்யாறு வட்டம், கூழம்பந்தலில் தெலுங்குச் சோழனான விஜயகண்ட கோபாலனின் (கி.பி.1270) கல்வெட்டு. ‘தினமலர்’
- 31/03/1999 - திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் பெரணமல்லூரில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய அய்யனார், கொற்றவைசிலைகள். ‘தினமலர்’
- 14/05/1999 - மதுராந்தகம் வட்டம், கொங்கரைகளத்தூரில் அரிய செய்திகளைக் கொண்ட இரண்டு பல்லவர்காலக் கல்வெட்டுகள். ‘தினமலர்’
- 03/04/2000 - காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம் ஈசூரில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால திருமால் சிற்பம். நெற்குன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமையான சமணதீர்த்தங்கரர், வெண்மாலகரத்தில் கோப்பெருஞ்சிங்கன் காலத்திய திருமால், சீதேவி, பூதேவிசிலைகள் (சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தியவை). ‘தினமலர்’
- -/-/2001 - கொங்கரையில் இரண்டாம் இராசேந்திரன் கல்வெட்டு.
- 24/01/2001 - 300 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் மதுராந்தகம் வட்டத்தில் கண்டுபிடிப்பு. ‘தினமலர்’
- 12/08/2001 - காஞ்சிபுரம் அருகே சிறுதாமூரில் சோழர் கால கல்வெட்டு சிற்பம். ‘தினமலர்’
- 09/11/2002 - ஆலந்தூரில் மண்ணுக்கடியில் இன்னொரு கோயில்கண்டுபிடிப்பு. ‘தினமலர்’
கல்வெட்டுப்பணிகள்
- -/01/1977 - செங்கை மாவட்டவரலாற்றுக்கருத்தரங்கு இந்தூர்கோட்டம். ஆய்வுக்கட்டுரை
- 23/12/1977 - மாநில வரலாற்றுக்கருத்தரங்கு கீழ்ச்சேரிக்கோழி ஆய்வுக்கட்டுரை
- 12/01/1978 - இந்தியாவின் கல்வெட்டுஆராய்ச்சிக்கழகம், நான்காம்பேரவை, சென்னை. கல்வெட்டுகளில் காணப்படும் சுவையானவழக்குகள். ஆய்வுக்கட்டுரை
- 16/08/1980 - தென்பாண்டி நாட்டு வரலாற்றுக் கருத்தரங்கு, மதுரை விக்கிரமபாண்டியன் கல்வெட்டு, பெருமுக்கல். ஆய்வுக்கட்டுரை
- 25/07/1982 - தஞ்சை மாவட்ட வரலாற்றுக்கருத்தரங்கு, தஞ்சை சாரநாடு. ஆய்வுக்கட்டுரை
- 09/05/1983 - இரண்டாம் இராசராசன்விழா, தாராசுரம் இராசகம்பீரன்மலை. ஆய்வுக்கட்டுரை
- 08.06.1983 - திருக்கோயிலூர், கோடைகாலக்கல்வெட்டுப்பயிற்சி வகுப்பில் சிறப்புச்சொற்பொழிவு.
- 21/12/1983 - இராசேந்திரசோழன்விழா, கங்கைகொண்டசோழபுரம் குந்தவைகட்டிய கோயில்கள். ஆய்வுக்கட்டுரை
- 04/01/1984 - காஞ்சிபுரம், கோடைகாலக் கல்வெட்டுப்பயிற்சி வகுப்பில் சிறப்புச்சொற்பொழிவு.
- -/-/1984 - ஊட்டியில்நடந்த கல்வெட்டுப்பயிற்சி அரங்கில் ‘கல்வெட்டு செய்தியைக்கூறும் சங்ககாலப்பாடல்கள்’ சொற்பொழிவு.