தமிழ்ப்பேராய விருதுகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ்ப்பேராய விருதுகள் என்பது தமிழ்நாட்டிலுள்ள திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் மூலம் அளிக்கப்படும் விருதுகளாகும். இப்பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவிய பணிப்புலமான தமிழ்ப்பேராயம் என்பதன் வழியாக இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன் புரவலராக இப்பல்கலைக்கழக வேந்தரான டாக்டர் த. இரா. பச்சமுத்து, தலைவராக இப்பல்கலைக்கழகத் துணைவேந்தரான முனைவர் மு. பொன்னவைக்கோ ஆகியோர் உள்ளனர். இதன் செயலாளராக முனைவர் பீ.மு. அபிபுல்லா என்பவர் செயல்பட்டு வருகிறார்.

வழங்கப்படும் விருதுகள்

ஒவ்வோர் ஆண்டும் கீழ்க்கண்ட வகைகளில் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கப்படுகின்றன.[1]

  1. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
  2. பாரதியார் கவிதை விருது
  3. அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது
  4. ஜி. யூ. போப் மொழிபெயர்ப்பு விருது
  5. பெ. நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது
  6. ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது
  7. முத்துத்தாண்டவர் தமிழிசை விருது
  8. இளம் ஆய்வறிஞருக்கான வளர்தமிழ் விருது
  9. விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது
  10. பரிதிமாற் கலைஞர் விருது
  11. பச்சமுத்து பைந்தமிழ் விருது
  12. சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது - வி. முத்தையா(2018)
  13. தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது - தமிக்கல்விச் சேவை அமைப்பு, சுவட்சர்லாந்து(2018)
  14. அருணாசலக் கவிராயர் விருது - களரி தொல்கலைகள் கலைஞர் மேம்பாட்டு மையம்(2018)
  15. பாரிவேந்தர் பைந்தமிழ் விருது - இ. சுந்தரமூர்த்தி (2018)[2]

பரிசுத்தொகை

  • மேற்காணும் விருதுகளில் முதல் எட்டு விருதுகள் ஒவ்வொன்றுக்கும் பரிசுத்தொகையாக இந்திய ரூபாய் 1,50,000/ மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.
  • பரிதிமாற் கலைஞர் விருதுக்கு பரிசுத்தொகையாக இந்திய ரூபாய் 2,00,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.
  • பச்சமுத்து பைந்தமிழ் விருதுக்கு பரிசுத்தொகையாக இந்திய ரூபாய் ரூ 5,00,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:தமிழ்ப்பேராய விருதுகள்

"https://tamilar.wiki/index.php?title=தமிழ்ப்பேராய_விருதுகள்&oldid=19395" இருந்து மீள்விக்கப்பட்டது