தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள் (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள்
நூல் பெயர்:தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள்
ஆசிரியர்(கள்):இ. முருகையன்
வகை:உரை
துறை:{{{பொருள்}}}
காலம்:1993 - 05 - 26
இடம்:யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
மொழி:தமிழ்
பதிப்பு:மஹாத்மா அச்சகம், ஏழாலை
ஆக்க அனுமதி:எல்லா உரிமையும் ஆசிரியருக்கு

தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள் என்பது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர், சுப்பிரமணியம் வித்தியானந்தன் நினைவுப் பேருரையின் அச்சுப்பதிப்பு ஆகும். 1993 ஆம் ஆண்டில், இந்த முதலாவது பேருரையை நிகழ்த்தியவர் இ. முருகையன். இவ்வுரையின் முழுமையான தலைப்பு தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள் - ஒரு பரிசீலனையும் சில யோசனைகளும் என்பதாகும்.

நோக்கம்

எழுத்துப் பெயர்ப்பு என்பது, ஒரு மொழியில் வழங்கும் சொற்களை வேறொரு மொழிக்குரிய எழுத்துகளைக் கொண்டு எழுதுதல் ஆகும். பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுத்துப் பெயர்ப்புச் செய்து பயன்படுத்துவது நீண்ட காலமாகவே இருந்துவருகின்ற ஒன்றுதான் எனினும் தற்காலத்தில் கூடுதலான அளவில் இடம்பெற்று வருகிறது. இதை முற்றாகத் தவிர்க்க முடியாது என்பது ஒருபுறம் இருக்க எழுத்துப் பெயர்ப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, இவ்வாறு ஏராளமான பிற மொழிச் சொற்களைத் தமிழுக்குக் கொண்டுவருவது தமிழ் வளர்ச்சிக்கு நல்லதா? என்ற கேள்வி எழுப்பப்படுவதுடன், தற்காலத்தில் பயன்பாட்டிலுள்ள முறைகளின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டித் திருந்திய முறைகளின் தேவை பற்றியும் பேசப்படுகிறது. எழுத்துப் பெயர்ப்பைத் திறம்படச் செய்வதற்குத் தமிழில் புதிய குறியீடுகள் வேண்டும் என்பதும் சிலரது கருத்து. இத்தகைய ஒரு சூழலில், நம்மிடையே ஏற்கெனவே வழக்கில் உள்ள எழுத்துப் பெயர்ப்பு முறைகளை வகைப்படுத்தி விவரிப்பதும், அவற்றின் நன்மை தீமைகளைப் பரிசீலிப்பதும், விமர்சனம் செய்வதும் அவசியம்[1] என்ற அடிப்படையில் இந்த உரை தயாரிக்கப்பட்டுள்ளது என முருகையன் குறிப்பிடுகிறார்.

துணைத் தலைப்புக்கள்

தான் எடுத்துக்கொண்ட பொருளை ஆசிரியர் பின்வரும் துணைத் தலைப்புக்களின் கீழ் ஆராய்கிறார்:

  • நடைமுறைத் தமிழில் எழுத்துப் பெயர்ப்பின் இடம்
  • வினைத்திறன் என்னும் எண்ணக்கரு
  • எழுத்துப் பெயர்ப்பு முறைகள்
  • எழுத்துப் பெயர்ப்பின் இயல்புகள்
  • பழைய முறை
  • ஒலிமரபுகள்
  • மாற்றங்கள்
  • திரிபுகளைக் குறைத்துக் கொள்ளல்
  • கைவசமுள்ள உபாயங்களைத் தகுந்த முறையிற் பயன்படுத்துதல்
  • புதிய ஏற்பாடுகள் சில
  • கிரந்த எழுத்துகள் பற்றி

குறிப்புகள்

  1. முருகையன், இ., தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள், அறிமுகப் பகுதி

வெளி இணைப்புக்கள்