தமிழியல் விருது 2012
தமிழியல் விருது என்பது இலங்கை, மட்டக்களப்பு அமிர்தகழியில் இயங்கிவரும் எழுத்தாளர் மையம் ஆண்டுதோறும் வழங்கிவரும் விருதாகும். இலங்கையிலும், மற்றும் புலம்பெயர்ந்தும் வாழும் படைப்பாளிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
2012 ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருதுக்காகத் தெரிவாகியுள்ள படைப்பாளிகளின் பட்டியல் வருமாறு,
உயர் தமிழியல் விருது
எழுத்தாளர் ஊக்குவிப்பு ஸ்தாபகர் பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது
- பேராசிரியர் எஸ். சண்முகதாஸ்
தமிழியல் விருது
தலா ரூபாய் 15,000 பணத்துடன் வவுனியூர் ஸ்ரீ இராமகிருஸ்ணா கமலநாயகி தமிழியல் விருது தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்த 14 படைப்பாளிகளுக்கு அளிக்கப்படுகிறது.
- என். கே. இரகுநாதன்
- சா. வே. பஞ்சாட்சரம்
- தெணியான்
- கே. ஆர். டேவிட்
- ஜூனைதா ஷெரீப்
- சாரல் நாடன்
- பொன்னம்பலம்
- ச. அருளானந்தம்
- சு. ஸ்ரீகந்தராசா
- எஸ். தில்லை நடராஜா
- செ. குணரெத்தினம்
- தாமரைச்செல்வி
- ஆ. மூ. சி. வேலழகன்
- எஸ். முத்துக்குமாரன்
தமிழ்ப்பணியாளர் தமிழியல் விருது
ரூபாய் 25,000 பணத்துடன் கல்விமான் வ. கனகசிங்கம் தமிழியல் விருது பெறும் அயல்நாட்டுப் படைப்பாளி
- வரலாற்று ஆய்வாளர் வைகிங் மு.ச. கருணாநிதி (துணைத்தலைவர், தமிழ்ச்சங்கம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு)
இனநல்லுறவுத் தமிழியல் விருது
ரூபாய் 10,000 பணத்துடன் வணபிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருது பெறும் இன நல்லுறவுக்காக உழைத்த சிங்கள மொழிப் படைப்பாளி
- சுந்தன தேசப்பிரிய
ஓவியருக்கான தமிழியல் விருது
ரூபாய் 10,000 பணத்துடன் ஓவியர் கிக்கோ தமிழியல் விருது பெறும் சிறந்த ஓவியர்
தமிழியல் விருது - தெரிவான நூல்கள்
தமிழியல் விருதுக்காக 2011 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவைகள்
சிறுகதை
ரூபாய் 10,000 பணத்துடன் துறையூர் வே. நாகேந்திரன் தமிழியல் விருது
- கூடுகள் சிதைந்த போது - அகில்.
நாவல்
ரூபாய் 10,000 பணத்துடன் துறையூர் நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருது
- அலைக்குமிழ் - அகளங்கன்
கவிதை
ரூபாய் 10,000 பணத்துடன் புலவர்மணி ஆ. மு. சரீபுத்தீன் தமிழியல் விருது
- துயரம் சுமக்கும் தோழர்களாய் - கவிஞர் குறிஞ்சிவாணன்
சிறுவர் இலக்கியம்
ரூபாய் 10,000 பணத்துடன் தகவம் வ. இராசையா தமிழியல் விருது
- சட்டியும் குட்டியும் - மாவை நித்தியானந்தன்
நாடகம்
ரூபாய் 10,000 பணத்துடன் கலைஞர் அழகரெத்தினம் தமிழியல் விருது
- ஆச்சி...ஆச்சாப்பாட்டி - க.இ. கமலநாதன்
ஆவணமாக்கல்
ரூபாய் 10,000 பணத்துடன் கலைஞர் ஓ.கே. கணபதியாபிள்ளை தமிழியல் விருது
- நூல்த் தேட்டம் - ந. செல்வராஜா
சமயம்
ரூபாய் 10,000 பணத்துடன் அருட்கலைவாரிதி சு. சண்முகவடிவேல் தமிழியல் விருது
- பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் - முகில் வண்ணன்
கட்டுரை
ரூபாய் 10,000 பணத்துடன் செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராஜா தமிழியல் விருது
- ஆசிரியத் தலையங்கம் ஓர் அறிமுகம் - அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை.
வரலாறு
ரூபாய் 10,000 பணத்துடன் வித்தியாகீர்த்தி ந. சந்திரகுமார் தமிழியல் விருது
- சுவடுகள் - எம்.சி.எம்.ஷெரீப்
ஆய்வு
ரூபாய் 10,000 பணத்துடன் பதிவாளர் நாயகம் எஸ். முத்துக்குமாரன் தமிழியல் விருது
- கிழக்கிலங்கைத் தமிழகம் - வாகரைவாணன்
பரிசளிப்பு விழா
தமிழியல் 2012 விருதுகளுக்கான பரிசளிப்பு விழா அக்டோபர்’ 2013ல் நடத்தப் பெற உள்ளது.