தஞ்சை வேதநாயக சாத்திரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ வேதநாயகம் சாஸ்திரியார் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) Proposed since June 2023. |
தஞ்சை வேதநாயக சாஸ்திரி (1774 - 1864) தமிழகத்துப் புலவரும் கவிஞரும் ஆவார். வித்தகக் கவிஞர், விவிலிய அறிஞர், ஞானதீபக் கவிராயர் என்று புகழாரம் சூட்டப்பெற்ற தமிழறிஞர்.
வாழ்க்கைச் சுருக்கம்
வேதநாயக சாத்திரியார் தமிழ்நாடு திருநெல்வேலியில் பிறந்தார். தந்தையார் பெயர் தேவசகாயம். தாயாரின் பெயர் ஞானப்பூ அம்மையார். தஞ்சை தரங்கம்பாடிக் கல்லூரியில் படித்தார். தஞ்சையில் அப்போது கிறித்தவ மத போதகராக இருந்த சுவார்ட்ஸ் பாதிரியார் என்பவரின் மாணாக்கரில் ஒருவராக இருந்தார். தஞ்சை வேதக் கல்லூரியில் தலைமைப் பொறுப்பை வகித்த பெருமை வேதநாயக சாஸ்திரியாருக்கு உண்டு. இவர் இறையியல், வானியல், உடலியல், சமூகவியல் என்ற பல்வேறு அறிவுத்துறைகளில் கற்றுத்துறை போகிய அறிஞராகத் திகழ்ந்தார். தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னருக்கு உற்ற நண்பராக விளங்கினார்.
பெத்தலகேம் குறவஞ்சி
இவரது 25ம் வயதில் இவர் இயற்றிய "பெத்தலகேம் குறவஞ்சி" என்னும் அவருடைய நாடகம் சென்னை வேப்பேரி கிறித்துவ சபையில் அரங்கேற்றம் பெற்றது. ஞானதீபக் கவிராயர் என்னும் சிறப்பினை அந்த நாடகம் பெற்றுத்தந்தது.
இயற்றிய நூல்கள்
நாடகங்கள்
- பெத்தலகேம் குறவஞ்சி
- சென்னப் பட்டணப் பிரவேசம் (குறுநாடகம்)
- ஞானத்தச்சன் (நாடக நூல்)
தெய்வப் பனுவல்கள்
- வண்ணசமுத்திரம்
- அறிவானந்தம்
- ஆதியானந்தம்
- பேரின்பக் காதல்
- ஆரணாதிந்தம்
- தியானப் புலம்பல்
- ஞானக் கும்மி
- பராபரன் மாலை
- ஞானவுலா
- ஆரணாதிந்தம்